லவ் ஹாலிடே
சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வரும் நிலையில், இப்போது லவ் ஹாலிடே அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருக்கும் ஒன்பது கல்லூரிகள் இந்த தனித்துவமான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. தங்கள் மாணவர்கள் காதலிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு வார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
மியான்யாங் வான்வழி தொழிற்கல்லூரி தான் இந்த விடுமுறையை முதன் முதலில் அறிவித்ததது. மார்ச் 21ம் தேதி வசந்த கால விடுமுறைக்கு பிறகு, இளம் மாணவர்கள் காதலில் கவனம் செலுத்த ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 7 வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இயற்கையை ரசிங்க
இது குறித்து கல்லூரியின் துணை இயக்குநர் கூறுகையில், “மாணவர்கள் பசுமையான இயற்கைக் காட்சிகளை ரசிக்க வேண்டும். நீர்நிலைகள், மலைகளை ரசிக்க வேண்டும். இவை மாணவர்களின் எல்லைகளை விரிவுபடுத்த உதவும். இது அவர்களின் உணர்வுகளையும் வளர்ப்பது மட்டுமல்லாமல், வகுப்பறையில் அவர்களின் செயல்பாடுகளை உயர்த்தவும் உதவும். வெளியே செல்வதைப் போட்டோ, வீடியோ எடுக்க வேண்டும், அது குறித்துக் குறிப்பு எழுத வேண்டும் என்ற ஹோம் ஒர்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.
ஏன் இந்த திடீர் அறிவிப்பு.?
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதல் இடத்தில் சீனா உள்ளது. அதைத் தொடர்ந்து மக்கள் தொகையை குறைக்க 1980 மற்றும் 2015 வரை அங்கே ஒரு குழந்தை கொள்கை அமலில் இருந்தது. அதன் காரணமாக நாட்டில் இளம் வயதினர் குறைவாகவும், முதியவர்கள் அதிகமாகவும் ஆகினர். மேலும் பிறப்பு விகிதமும் கடுமையாக குறைந்தது.
அதனால் கடந்த 2021ம் ஆண்டு மூன்று குழந்தைகளைப் பெறலாம் என்று அறிவித்தது. மேலும், பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளத் திருமணம் செய்திருக்க வேண்டும் என்ற விதியையும் தளர்த்தியது. ஆனாலும் பிறப்பு விகிதத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கடந்த 2022ம் ஆண்டின் படி சீனாவின் பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 6.77 ஆகக் குறைந்துள்ளது.
ஆர்வம் காட்டாத தம்பதிகள்
குழந்தை பராமரிப்பு, கல்வி செலவுகள், குறைந்த வருமானம், பாலின பாகுபாடு ஆகியவை இதற்குக் காரணமாக உள்ளது. இதனை சரி செய்யும் வகையில், சீனாவின் மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு (CPPCC) பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.
மீண்டும் ஒரு பிரெஞ்சு புரட்சி; போர்க்களமாக மாறிய பாரிஸ் நகர வீதிகள்.!
முதலாளிகளுக்குப் பதிலாக அரசாங்கத்தால் வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு, பெண்களுக்கு எதிரான பாகுபாட்டைக் குறைக்க உதவும் போன்ற யோசனைகளைக் கொண்டு வந்தது. மேலும் சில சீன மாகாணங்கள் புதுமணத் தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறையை சமீபத்தில் வழங்கின என்பதும் குறிப்பிடதக்கது.