போரில் உக்ரைன் வெல்லும்… அதைக் காட்டத்தான் இதைச் செய்தேன்: ஜேர்மன் அமைச்சர்


ஜேர்மன் பொருளாதாரத்துறை அமைச்சர், திடீரென உக்ரைன் தலைநகரான கீவ்வுக்கு வருகை புரிந்தார்.

என்ன காரணம்?

ஜேர்மனியின் பொருளாதாரத்துறை மற்றும் ஆற்றல் துறை அமைச்சரான Robert Habeck, இன்று உக்ரைனுக்கு சர்ப்ரைஸாக வருகை புரிந்தார்.

இந்த வருகையின் நோக்கம் என்னவென்று கீவ் ரயில் நிலையத்தில் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, உக்ரைன் இந்தப் போரில் வெற்றிபெறும், அது மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்பதை நாங்கள் நம்புகிறோம் என்பதை உக்ரைனுக்குத் தெரிவிக்கும் சமிக்ஞையாகத்தான் தான் கீவ் வந்துள்ளதாக தெரிவித்தார் Habeck.
எதிர்காலத்தில், பொருளாதார ரீதியில், ஒரு வலிமையான கூட்டாளியாக உக்ரைன் இருக்கும் என்றார் அவர்.

ஜேர்மனியின் துணை சேன்ஸலராகவும் பதவி வகிக்கும் Habeck, ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதற்குப் பின், முதன்முறையாக உக்ரைன் வருவது குறிப்பிடத்தக்கது.

போரில் உக்ரைன் வெல்லும்... அதைக் காட்டத்தான் இதைச் செய்தேன்: ஜேர்மன் அமைச்சர் | Ukraine Will Win The War

NDTV



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.