சென்னை: தமிழ் சீரியல்களிலும் படங்களிலும் நடிக்கும் பிரபலம் ஒருவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
தமிழில் வெளியாகும் சீரியல்களில் நடிப்பவர்களுக்கு தற்போது நல்ல தொகை வருமானமாக வழங்கப்பட்டு வருகிறது. உதாரணமாக சீனியர் நடிகர்களுக்கு ஒரு நாள் கால் சீட்டிற்கே 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
சீரியலில் வசனம் எழுதுபவர்களுக்கு எல்லாம் 10 ஆயிரம் ரூபாய் கூட தாண்டி வருமானம் வழங்கப்பட்டு வருகிறது. சீரியலில் வேலை பார்ப்பது என்பது தற்போது பணம் கொட்டும் துறையாக மாறி உள்ளது.
சீரியல்
இந்த நிலையில்தான் தமிழ் சீரியல்களிலும் படங்களிலும் நடிக்கும் பிரபலம் ஒருவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்து சன் டிவியில் ஹிட்டான சீரியல் தங்கம். இந்த சீரியலில் முக்கியமான பாத்திரத்தில், அதாவது ரம்யா கிருஷ்ணன் கணவர் பாத்திரத்தில் வந்தவர்தான் கிருஷ்ணா குமார். கேரளாவை சேர்ந்த இவர் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். சன் டிவியில் பல்வேறு சீரியல்களில் இவர் நடித்து இருக்கிறார்.

பல்வேறு சீரியல்
அதேபோல் மற்ற சில சேனல்களிலும் சீரியல்களில் கிருஷ்ணகுமார் நடித்து இருக்கிறார். இதெல்லாம் போக மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார். தமிழில் தெய்வ திருமகள், சத்யம், தில்லாலங்கடி, காவலன், பில்லா 2, முகமூடி, மனிதன் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். சீரியல்களின் மூலம் பிரதானமாக வருமானம் ஈட்டி வந்த இவர் பாஜகவில் இருக்கிறார். பாஜக சார்பாக கடந்த சட்டசபை தேர்தலில் திருவானந்தபுரம் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு இவர் தோல்வி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பு
கிருஷ்ணகுமாரின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இவருக்கு மனைவி, 4 மகள்கள் என்று பெரிய குடும்பமே உள்ளது. இவரின் மகள்கள் 4 பேருமே இஸ்டாவில் மிக பிரபலம். இதில் கிருஷ்ணகுமாருக்கு மட்டும் 2,85,04,246 ரூபாய் சொத்து தனியாக உள்ளது . 48,52,760 மதிப்பில் வாகனங்கள் உள்ளன. இவரின் மனைவிக்கு மாத வருமானம் 4,65,250 ஆகும். இவரின் முதல் பெண் குழந்தையான ஆஹானாவிற்கு வருமானம் மாதம் 16,18,205 ஆகும்,

வங்கி கணக்கு
கிருஷ்ணகுமாரிடம் 12 வங்கி கணக்குகள் உள்ளன. அதில் எல்லாம் சேமிப்பு ரூபாய் 1,28,75,245 உள்ளது.ரூபாய் 33,27,000 மதிப்பிலான தங்கம் இவரிடம் உள்ளது. இவரின் வீட்டின் மதிப்பு மட்டும் ரூபாய் 2,00,00,000 ஆகும். இது போக இவரின் மகள்களுக்கு தனி தனியாக நிறைய வங்கி கணக்குகள் உள்ளன. கிட்டத்தட்ட 10 வங்கி கணக்குகள் உள்ளன. அதில் எல்லாம் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் வரை இவர் சேமித்து வைத்து உள்ளார். இவை அனைத்தும் இவர் சீரியல்கள் மூலம் ஈட்டிய வருமானம் ஆகும்.