அய்யர் குடும்பத்தில் மாமியாக இருக்கலாம் ஆனால் உன்னை மாதிரி மாமாவாக இருப்பதுதான் அசிங்கம் என்று நெட்டிசனை நடிகை கஸ்தூரி வெளுத்து வாங்கியுள்ளார்.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி பேராசியர் ஹரி பத்மன் உள்ளிட்ட நான்கு பேர் மீது குற்றசாட்டுகள் எழுந்தன. மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
மாணவிகள் புகார்
இதனை அடுத்து கலாஷேத்ராவில் 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 வரை படித்த மாணவிகள் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நான்கு பேரில் ஒருவரான உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த ஹரி பத்மன் தலைமறைவாகினார். அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் தொடர்ந்து தேடப்பட்டு வந்த நிலையில் இன்று அவரை கைது செய்தது போலீஸ்.
மாமி
இந்த நிலையில் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டதை கிண்டலாக பதிவிட்டதோடு தன்னை டேக் செய்து கேள்வி எழுப்பிய நெட்டிசனுக்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார். அந்த ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ட்வீட்டில், ”இவர் அய்யர் மிகவும் நல்லவர். மாமி @KasthuriShankar வாங்க கருத்து சொல்லுங்க?” என்று சரவணன் என்பவர் கிண்டல் செய்திருந்தார்.
அதற்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ள கஸ்தூரி ” Kalakshetra பெண்களுக்கு நீதியை விட யார் என்ன ஜாதி என்பதே த்ராவிடியான்ஸ்சுக்கு முக்கியமாக உள்ளது. Hari padman அய்யர் இல்லை. நீர்தான் பொய்யர். ரொம்ப கேவலமானவர்.
Dravidiyas for a reason! பி. கு: ஒருவர் மாமியென்றால் no problem. உன்னை போல் மாமாவாக இருப்பது தான் அசிங்கம்” என்று இவ்வாறு கொந்தளித்துள்ளார் கஸ்தூரி.
நடிகை கஸ்தூரியை பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு சிலர் அவ்வப்போது அவரை பாஜக சம்மந்தப்பட்ட விவகாரத்தில் வம்பு இழுத்து வருகின்றனர். அவரும் அதற்கு காட்டமான பதிவுகளால் விளாசி வருகிறார்.
அதுபோல, ட்விட்டரில் திமுகவைச் சார்ந்தவர் என்ற குறியீடுடன் சிலர் பெண்களை ஒருமையில் பேசி ஆபாச கருத்துக்களை பதிவு செய்வதாக குற்றசாட்டுகள் இருந்து வருகிறது. இதற்கு எதிர்தரப்பினர் எச்சரிக்கை செய்தாலும் தொடர்ந்து அதுபோன்ற பதிவுகளை போட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல யூடியூபருடன் பெண் தொகுப்பாளரை சேர்த்து ஆபாசமாக பேசி ஒருவர் ட்வீட் போட அதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும், அதை வெறும் தகவல் என்று அந்த நபர் குறிப்பிட்டு இருவரது புகைபடத்தையும் பதிவிட்டு பின்னர் அதனை டெலிட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.