தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அருள்நிதிவுடன் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெயர் ‘திருவின் குரல்’ ஆகும். இந்தப் இந்தப் படத்தை இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை ஆத்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் வித்தியாசமான கதை அம்சத்துடன் உருவாக்கியுள்ளது எனவும் இதில் பாரதிராஜாவின் கதாபாத்திரம் பேசப்படும் எனவும் படக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இந்த திரைப்படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் சுபத்ரா ராபர்ட், மோனேகா சிவா, அஷ்ரஃப், ஏ.ஆர்.ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம், மகேந்திரன் மற்றும் முல்லையரசி உள்ளிட்ட பலர் துணை வேடங்களில் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைக்க, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கை முறையே சிண்டோ போடுதாஸ் மற்றும் கணேஷ் சிவா ஆகியோர் செய்துள்ளனர். மேலும் இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
The Awaited Trailer of #ThiruvinKural is Releasing TODAY at 3PM!
In cinemas from 14th April.
@arulnithitamil @offBharathiraja @im_aathmika
@harishprabhu_ns
@SamCSmusic
@sintopoduthas
@thecutsmaker@thinkmusicindia
@gkmtamilkumaran pic.twitter.com/fPYtLjpLqv— Lyca Productions (@LycaProductions) April 3, 2023
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ‘திருவின் குரல்‘ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு உள்ளனர். ட்ரெய்லர் அருள் நிதியின் கேரக்டர் அறிமுகத்துடன் தொடங்கி ரசிகர்களுக்கு திருப்பங்கள் நிறைந்த படமாக இருக்கும் என்பதை உறுதியளிக்கிறது. மேலும் இந்த படம் முழுக்க முழுக்க மருத்துவக் குற்றத்தை சார்ந்தது போல் தெரிகிறது.
#ThiruvinKural trailer ..hope you all will like it https://t.co/nSZAkywlEf
— Arulnithi tamilarasu (@arulnithitamil) April 3, 2023