மேகனுக்காக மூன்று ஆண்டுகள் விதியைத் தூக்கி எறிந்த இளவரசர் ஹரி: ஒரு சுவாரஸ்ய தகவல்


காதல் விடயத்தில் மூன்று ஆண்டுகள் விதி ஒன்றை வைத்திருந்த ஹரி, மேகனைக் கண்டதும் அதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டாராம்.


அது என்ன மூன்று ஆண்டுகள் விதி?

தான் ஒரு ராஜ குடும்ப உறுப்பினராக இருந்ததால், தான் யாரைக் காதலித்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு முன் அவரைத் திருமணம் செய்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தாராம் இளவரசர் ஹரி.

அதாவது, மூன்று ஆண்டுகள் ஒரு பெண்ணுடன் பழகி, அவரைப் புரிந்துகொண்டு, தன்னை அவர் புரிந்துகொண்டபின்னரே திருமணம் செய்துகொள்வது என முடிவு செய்திருந்தாராம் ஹரி.

மூன்று ஆண்டுகளாவது பழகவில்லையென்றால், அந்தப் பெண்ணுக்கு ராஜ குடும்பம் பற்றி எப்படி தெரிந்துகொள்ளமுடியும், சேர்ந்து வாழப்போகும் இருவர் இதையெல்லாம் உறுதிசெய்துகொள்ள மூன்று ஆண்டுகளாவது வேண்டாமா என்பது ஹரியின் கேள்வி.

மேகனுக்காக மூன்று ஆண்டுகள் விதியைத் தூக்கி எறிந்த இளவரசர் ஹரி: ஒரு சுவாரஸ்ய தகவல் | Prince Harry Threw Three Years Fate For Meghan

Image: Getty Images

மேகனைக் கண்டதும் மாறிய முடிவு

ஆனால், மேகனை சந்தித்ததுமே எல்லாம் மாறிப்போனது. எல்லா விதிகளையும் தூக்கிப்போட்டுவிட்டேன் என்கிறார் ஹரி. அவரை நான் புரிந்துகொண்டேன், என்னை மேகன் புரிந்துகொண்டார். மேகன் விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் போல் தெரிந்தார் என்கிறார் அவர்.

அப்புறம் என்ன? மூன்றாண்டுகள் விதியைத் தூக்கிப்போட்டு விட்டு, மேகனை சந்தித்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே அவரை ஹரி திருமணம் செய்துகொண்டதைத்தான் உலகமே அறியுமே! 

மேகனுக்காக மூன்று ஆண்டுகள் விதியைத் தூக்கி எறிந்த இளவரசர் ஹரி: ஒரு சுவாரஸ்ய தகவல் | Prince Harry Threw Three Years Fate For Meghan

Image: Getty Images



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.