புதுடெல்லி: மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது. அண்மையில் மேற்கு வங்கம், பிஹார் மாநிலங்களில் ஸ்ரீ ராம நவமி பண்டிகை கொண்டாட்டத்தின் போது மதரீதியான வன்முறைகள் நடைபெற்றன. மேற்கு வங்கம், பிஹாரில் பற்றி எரியும் இந்த பிரச்சினைகளுக்கு நாட்டு மக்கள் முடிவு கட்ட வேண்டும்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக பிரதமர் மோடி பேச மறுப்பது ஏன்? அவர் ஏன் தொடர்ந்து மவுனமாக இருக்கிறார்? இந்த சம்பவங்களுக்குக் காரணமானவர்களை கண்டிக்காமல் இருப்பது ஏன்?
இந்த விஷயம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளிப்படையாக பேச வேண்டும். இந்த சம்பவங்களுக்கு அவர் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி வகுப்புவாத வன்முறை, வெறுப்புப் பேச்சுகளை பேசுதல், சிறுபான்மையினரை தூண்டி விடுதல், நான்காவதாக அமலாக்கத் துறை, சிபிஐ, தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை குறிவைத்தல் ஆகிய 4 திட்டங்களை பாஜக முன்னெடுத்துச் செல்கிறது. இவ்வாறு கபில் சிபில் தெரிவித்துள்ளார்.