ரசிகர்களை முட்டாளாக்கிய உர்பி ஜாவேத்

பிரபல பாலிவுட் நடிகை உர்பி ஜாவேத். படங்களில் நடிப்பதை விட விதவிதமான கவர்ச்சி ஆடைகளுக்காக பிரபலமானவர். கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், பூ இதழ்கள் போன்றவற்றில் செய்யப்பட்ட ஆடை அணிந்து புகைப்படங்களாக வெளியிடுவார்.

படு கவர்ச்சியான ஆடைகள் அணிந்ததாக, பொது இடங்களில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியதாக இவர் மீது ஏராளமான வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவர் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டு டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டார் அதில் “நான் அணிந்த ஆடைகளின் மூலம் உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இனி நீங்கள் வேறு உர்பியை பார்ப்பீர்கள்”என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு அவரது ரசிகர்கள் பலர் பாராட்டு தெரிவித்தனர். பலர் உங்கள் பலமே அதுதானே… நீங்கள் நல்ல ஆடைகள் அணிந்தால் நன்றாக இருக்க மாட்டீர்கள் என்றும் கருத்து தெரிவித்தனர். இந்த டுவிட்டை வெளியிட்ட சில மணி நேரத்திலே. “ஏப்ரல் பூல். நான் எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானவள் என்று எனக்கு தெரியும்” என்று பதிவிட்டுள்ளார். இதனால் உர்பி மீது ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.