வலிமை குறைந்ததாக எப்பொழுதெல்லாம் நினைக்கிறதோ அப்போதெல்லாம் பாஜக வன்முறையை தூண்டிவிடுகிறது: மல்லிகார்ஜூன கார்கே!

டெல்லி: வலிமை குறைந்ததாக எப்பொழுதெல்லாம் நினைக்கிறதோ அப்போதெல்லாம் பாஜக வன்முறையை தூண்டிவிடுகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். கடந்த வாரம் ராம நவமி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டங்களின்போது பீகார், மேற்குவங்காளம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் வன்முறை சம்பவம் நடந்தேறியது.

பீகாரின் நலாந்தா, சஸாரம் போன்ற பகுதியில் கலவரம் ஏற்பட்டதில், ஒருவர் கொலை செய்யப்பட்டார். 6 பேர் படுகாயமடைந்தனர். அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராம நவமி பண்டிகையில் ஏற்பட்ட வன்முறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: வலிமை குறைந்ததாக எப்போதெல்லாம் நினைக்கிறதோ அப்போதெல்லாம் பாஜக வன்முறையை தூண்டிவிடுகிறது.

ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் வன்முறையை தூண்டிவிட்டு பாஜக ஆதாயத்தை தேடுகிறது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வாதாட முடியாது ஆனால் ஒன்றிய அரசுக்கு எதிராக போராடலாம் என்று கூறியுள்ளார். அவர்கள் (மையம்) அதானி வரிசையில் ஜேபிசியை உருவாக்க விரும்பவில்லை. நாடாளுமன்றம் செயல்படாது என்று திட்டமிட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.