வாடகை மின்-ஸ்கூட்டர்கள் வேண்டாம்: பெருமளவில் வாக்களித்த பாரிஸ்வாசிகள்!


வாடகைக்கு மின்சார ஸ்கூட்டர்களை தடை செய்ய வேண்டுமென பாரிஸ் மக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர்.

வாடகை மின்-ஸ்கூட்டர்கள் தடை- வாக்களித்த பாரிஸ் வாசிகள்

பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் தெருக்களில் வாடகைக்கு மின்சார ஸ்கூட்டர்களை வாங்குவதை தடை செய்ய பாரிஸ் குடிமக்கள் ஞாயிற்றுக்கிழமை பெருமளவில் வாக்களித்தனர்.

இந்த வாக்குப்பதிவு, சாலை பாதுகாப்பு பிரச்சாரகர்களுக்கு வெற்றியுடன் முடிந்தது, அதேநேரத்தில் நகரத்தில் வாடகை மின்-ஸ்கூட்டர்களை நடத்துபவர்களுக்கு பெரும் அடியாக இருந்தது.

வாடகை மின்-ஸ்கூட்டர்கள் வேண்டாம்: பெருமளவில் வாக்களித்த பாரிஸ்வாசிகள்! | Parisians Massive Vote Ban Hire Electric ScootersRent&Go

இந்த வாக்கெடுப்பு பாரிஸ் நகரத்திற்கு மிகப்பாரிய மாற்றமாக அமையவுள்ளது. ஏனெனில், பாரிஸ் ஒரு காலத்தில் இ-ஸ்கூட்டரின் சேவைகளை ஏற்றுக்கொள்வதில் முன்னோடியாக இருந்தது.

ஆனால், இப்போது மின்-ஸ்கூட்டரை தடை செய்யும் ஐரோப்பாவின் ஒரே பாரிய தலைநகராக பாரிஸ் மாறவுள்ளது.

மின்-ஸ்கூட்டர்களுக்கு எதிராக 90 சதவீத வாக்குகள்

பாரிஸ் நகர் மேயர் அன்னே ஹிடால்கோ (Anne Hidalgo) ஏற்பாடு செய்திருந்த பொது கலந்தாய்வில் நகரவாசிகள் அவர்களின் விருப்பப்படி மின்-ஸ்கூட்டர்களை தடை செய்வதற்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இதில் ஸ்கூட்டர்களுக்கு எதிராக சுமார் 90 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன என்பது அதிகாரப்பூர்வ முடிவுகளைக் காட்டியது.

வாடகை மின்-ஸ்கூட்டர்கள் வேண்டாம்: பெருமளவில் வாக்களித்த பாரிஸ்வாசிகள்! | Parisians Massive Vote Ban Hire Electric ScootersReuters

நான்கு ஆண்டு போராட்டம்

இதையடுத்து, “நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நான்கு ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம்” என்று இ-ஸ்கூட்டர் விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் Apacauvi அறக்கட்டளையின் இணை நிறுவனர் Arnaud Kielbasa கூறினார்.

“அனைத்து பாரிஸ் வாசிகளும் தாங்கள் நடைபாதைகளில் பதட்டமாக இருப்பதாகவும், சாலைகளைக் கடக்கும்போது பதட்டமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். நீங்கள் எல்லா இடங்களிலும் இதை பார்க்கலாம்” என்றும், அதனால்தான் மக்கள் அதற்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

Kielbasa-வின் கைக்குழந்தை மற்றும் மனைவியும் இ-ஸ்கூட்டர் டிரைவரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வாடகை மின்-ஸ்கூட்டர்கள் வேண்டாம்: பெருமளவில் வாக்களித்த பாரிஸ்வாசிகள்! | Parisians Massive Vote Ban Hire Electric ScootersLime

வாடகை மின்-ஸ்கூட்டர்கள் வேண்டாம்: பெருமளவில் வாக்களித்த பாரிஸ்வாசிகள்! | Parisians Massive Vote Ban Hire Electric ScootersReuters



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.