விமானக் கட்டண உயர்வு குறித்து விவாதிக்க தனியார் விமான நிறுவனங்களுக்கு நாடாளுமன்றக் குழு அழைப்பு விடுத்துள்ளது. பெரும்பாலான விமானங்களில் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பது கவலையை ஏற்படுத்துவதாக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி விஜய்சாய் ரெட்டி தலைமையிலான நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விவாதிக்க வருமாறு இண்டிகோ, விஸ்தாரா, கோ ஏர், ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பல விமான நிறுவனங்களுக்கு அந்தக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விமானப் போக்குவரத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.