விருது விழாவில் அவமானப்படுத்தப்பட்டாரா நெல்சன்.?: கொந்தளிக்கும் ரசிகர்கள்.!

ரஜினி ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘ஜெயிலர்’ படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்நிலையில் விருது விழா ஒன்றில் நெல்சன் அவமானப்படுத்தப்பட்டதாக வைரலாகும் வீடியோவால் சர்ச்சைகள் வெடித்துள்ளது.

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர் நெல்சன் திலீப்குமார். கடந்த கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நயன்தாரா பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்த இந்தப்படத்தின் வித்தியாசமான மேக்கிங் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

முதல் படத்திலே தன்னை வெற்றி இயக்குனராக நிலை நிறுத்திய நெல்சன் அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். பிளாக் காமெடி ஜானரில் வெளியான இந்தப்படமும் அதிரிபுதியான வெற்றியை சுவைத்தது. அத்துடன் வசூலிலும் பட்டையை கிளப்பியது. இதனால் தனது மூன்றாவது படத்திலே விஜய்யை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றினார் நெல்சன் திலீப்குமார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான இந்தப்படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. அத்துடன் படத்தின் காட்சிகளை ட்ரோல் செய்து கழுவி ஊற்றினர் நெட்டின்சன்கள். இதனால் நெல்சன் மீது விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். நல்லவேளையாக ‘பீஸ்ட்’ படம் வெளியாவதற்கு முன்பே ‘ஜெயிலர்’ படத்தை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றினார்.

இரட்டை குழந்தைகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நயன்தாரா: குவியும் வாழ்த்துக்கள்.!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் இந்தப்படத்தை மலைப்போல் நம்பி காத்துள்ளார் நெல்சன். இந்நிலையில் விருது விழா ஒன்றுக்கு சிவம்பு கம்பள வரவேற்பில் வந்த நெல்சனை பவுன்சர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை மட்டும் காண்பித்து உள்ளே செல்ல சொல்லிருக்கின்றனர். அவரை அங்குள்ள யாரும் உள்ளே அழைத்து சென்று உட்கார வைக்கவில்லை. நெல்சனும் வெறும் புன்னகையுடன் தன்னுடைய நண்பர் ரெடின் கிங்ஸ்லியுடன் அரங்கத்திற்குள் சென்றுள்ளார்.

Vijay: தளபதின்னா சும்மாவா.. உலகளவில் மாஸ் காட்டும் விஜய்: தெறிக்கவிடும் ரசிகர்கள்.!

அவருக்கு பின்னாடி வந்த லோகேஷை வரவேற்பதற்காக நெல்சனை பவுன்சர்கள் கழட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமான போட்டோஸ் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஒரு படம் பிளாப் ஆனதுக்கு இப்படியா என வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ‘ஜெயிலர்’ படம் மூலம் தரமான கம்பேக் கொடுங்கள் நெல்சன் என்றும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.