நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் சந்தப்பட்டவர்களுடன் சுமூகமான கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் ஊடாகவும் வெடுக்குநாறி விவகாரத்திற்கு விரைவில் நிரந்தர தீர்வு எட்டப்படும் என்று வெடுக்குநாறி மலையில் வைத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஒத்துழைப்புக்களை வழங்குகின்ற ஜனாதிபதிக்கு நன்றி கூறுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிக்கையில், உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதனால் ஆவணங்களை கோரியுள்ளேன். சமய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக வெடுக்குநாறி உரிய ஆவணங்கள் மற்றும் அங்கீகாரத்தை சட்டப்பூர்வமாக பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த விடயம் குறித்து பேசப்படும். இவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறாமல் தடுப்பதற்கான பொறிமுறை ஒன்றை அமைக்குமாறு கோரவுள்ளேன்.
இப்படியான சம்பவங்கள் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடும். எனவே, உரிய விசாரணையை நடத்துமாறு பொலிஸாரிடமும் கோரியுள்ளேன் என்று தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்போது அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் ஆகியோர், நெடுங்கேணி, வெடுக்குநாறி ஆதி சிவன் லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர்.