மதுரையில் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த நபர் விரக்தியில் 50 தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. கோவையில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஜெகதீஷ் தனது நண்பரான பிரகாஷ் என்பவரிடம் இருந்து நிதி நிறுவனத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்தால், இரட்டிப்பாக தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார் .
அந்த பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த நிலையில் பணத்தை மீட்டெடுக்க முடியாத நிலையில் ஜெகதீஷ் தவித்து வந்துள்ளார். பணம் கொடுத்த பிரகாஷ் பணத்தை திரும்பப் பெற முடியாததால் இதுதொடர்பாக காவல்நிலையைத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் விரக்தியில் இருந்து வந்த ஜெகதீஷ் 50 தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெகதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அவனியாபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.