‘துணிவு’ படத்தினை தொடர்ந்து அஜித் அடுத்த நடிக்கவுள்ள படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்தப்படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பதுதான் ரசிகர்களின் நீண்ட நாள் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் ‘ஏகே 62’ படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
கடந்த ரீலிசாக அஜித் நடிப்பில் ‘துணிவு’ படம் வெளியானது. மூன்றாவது முறையாக அஜித், வினோத், போனி கபூர் கூட்டணி இந்தப்படத்தில் இணைந்தது. ‘துணிவு’ படத்திற்கு முன்பாக இவர்கள் கூட்டணியில் வெளியான ‘வலிமை’ படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. குறிப்பாக அஜித்தின் லுக் இந்தப்படத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் கடந்த பொங்கலுக்கு வெளியான ‘துணிவு’ படத்தில் சால்ட் அன்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல், காதில் கடுக்கன் என மாஸ் காட்டினார் அஜித். வங்கியில் மியூச்சுவல் பண்ட் என்ற பெயரில் நடக்கும் கொள்ளையை தோலுரித்து காட்டும் விதமாக ‘துணிவு’ படம் வெளியானது. ‘வாரிசு’ படத்துடன் போட்டியாக ரிலீசான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் ‘துணிவு’ ரிலீசுக்கு முன்பாகவே ‘ஏகே 62’ படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அஜித் நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்தப்படம் உருவாகவுள்ளதாக லைகா நிறுவனம் அதிரடியாக அறிவித்தது. அதனை தொடர்ந்து திடீரென விக்னேஷ் சிவன் ‘ஏகே 62’ படத்திற்காக உருவாக்கிய கதை தயாரிப்பு மற்றும் அஜித் தரப்புக்கு பிடிக்காததால் அவர் இந்த்ப்படத்திலிருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
விருது விழாவில் அவமானப்படுத்தப்பட்டாரா நெல்சன்.?: கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதனை தொடர்ந்து மகிழ் திருமேனி ‘ஏகே 62’ படத்தை இயக்குவது ஏறக்குறையை உறுதியாகி விட்டாலும் இன்னமும் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடாமல் இருக்கிறது. அண்மையில் நடிகர் அஜித்தின் தந்தை காலமானதால் ‘ஏகே 62’ படம் குறித்த பேச்சே சுத்தமாக நின்று போனது. ஆரம்பத்தில் ‘ஏகே 62’ படத்தை விரைவாக முடித்து இந்தாண்டே ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின்படி ‘ஏகே 62’ படத்தை இந்தாண்டு வெளியிட வாய்ப்பே இல்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘துணிவு’ படத்தை போலவும் இந்தப்படத்தையும் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. அந்த சமயத்தில் தான் சூர்யா 42 படமும் ரிலீசாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ஏகே 62’ பட ரிலீஸ் ஒரேயடியாக அடுத்தாண்டு தள்ளிபோயுள்ளது அஜித் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை குழந்தைகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நயன்தாரா: குவியும் வாழ்த்துக்கள்.!