எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
ஆப்பிள் நிறுவனத்தின் போன்களை மக்கள் விரும்ப அதன் வசதிகள் மட்டுமல்லாமல் அந்த நிறுவனத்தின் மீது மக்களுக்கு இருக்கும் ஆசை. ஆனால் அந்த நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மகள் கடந்த மாதம் அந்த நிறுவனத்தின் ஐபோன் 14 மாடலை கிண்டலடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால் தற்போது அந்த போன் இல்லாமல் தன்னால் வாழ முடியவில்லை என்று கூறியுள்ளார். ஒரு நேர்காணலில் பேசிய அவர் தனக்கு தேவையான சில முக்கியமான விஷயங்களில் ஐபோன் 14 ஒன்று என்று தெரிவித்துள்ளார்.
ஐபோன் 14 வெளியானபோது அதன் டிசைன் ஐபோன் 13 போலவே இருப்பதாக நக்கலடித்து அவர் இப்போது அவரின் ஐபோன் 13 போனில் இருந்து 14 போனிற்கு மாறியுள்ளார். அவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு அறிவியல் பட்டதாரி.
ஐபோன் 14 அந்த சீரிஸ் போன்களில் குறைந்த விலை போன் ஆகும். இதேபோல ஐபோன் 14 ப்ளஸ் மற்றும் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் விற்கப்படுகின்றன. இந்த மாடல்களில் Apple A15 Bionic 15 சிப் உள்ளது. இதன் விலை 79,999 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 128GB, 256GB, 512GB ஆகிய மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் 6.1 இன்ச் Super Retina XDR டிஸ்பிளே, 2532×1170 pixel Resolution, Ceramic Shield பாதுகாப்பு உள்ளது.
கேமரா அம்சங்களாக 12MP முக்கிய கேமரா, 12MP அல்ட்ரா வைட் கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மஞ்சள் நிறத்தில் ஸ்பெஷல் வேரியண்ட்டாக வெளியாகியுள்ளது. இது இல்லாமல் நமக்கு Midnight, Purple, Starlight, Product Red, Blue ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்