Dhanush: வெற்றிமாறனுக்கு தனுஷ் செய்த மிகப்பெரிய உதவி..இன்றளவும் மறக்காத வெற்றிமாறன்..!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
இன்று வெற்றிமாறன் இந்திய சினிமாவில் மிக முக்கியமான இடத்தில் இருக்கின்றார். இவர் இதுவரை இயக்கிய அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றியை மட்டும் பெறாமல் பல விருதுகளையும் தட்டி சென்றுள்ளது. இதுவரை தோல்வியே கண்டிராத வெற்றிமாறனின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

சூரியை நாயகனாக வைத்து வெற்றிமாறன் இரண்டு பாகங்களாக இயக்கிய திரைப்படம் தான் விடுதலை. விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படம் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்றுள்ளது.

AK62: எனக்கும் கிரிக்கெட் தெரியும்..நானும் ஒரு ஆல்ரவுண்டர் தான்..அஜித்தின் மறுபக்கம்..!

இந்நிலையில் வெற்றிமாறனின் வெற்றிப்பயணம் பொல்லாதவன் படத்தின் மூலமே துவங்கியது. தனுஷின் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பொல்லாதவன். இப்படம் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் வெற்றிக்கூட்டணி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

வெற்றிமாறனுக்கு தனுஷ் செய்த மிகப்பெரிய உதவி..இன்றளவும் மறக்காத வெற்றிமாறன்..!

மேலும் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான ஆடுகளம், அசுரன் படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டு முறை வென்றார் தனுஷ். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் வெற்றிமாறனுக்கு தனுஷ் ஆரம்பகாலத்தில் செய்த உதவியை இன்றளவும் வெற்றிமாறன் மறக்காமல் நன்றியுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்குனராவதற்கு முன்பு அவருக்கு திருமணம் ஆனது. அப்போது அவருக்கு ஒரு லட்சம் பணம் திருமணத்திற்காக தேவைப்பட்டது. அப்பணத்திற்காக பல இடங்களிலும் கேட்டும் வெற்றிமாறனுக்கு கிடைக்கவில்லை. கடைசியாக தனுஷிடம் உதவி கேட்கலாம் என எண்ணிய வெற்றிமாறன் தயக்கத்துடன் தனுஷிடம் சென்று உதவி கேட்டுள்ளார்.

உடனே தனுஷ் எதைப்பற்றியும் யோசிக்காமல் அந்த பணத்தை தந்து உதவியுள்ளார். இந்த உதவியை வெற்றிமாறன் இன்றளவும் மறவாமல் தனுஷின் மீது தனி பிரியம் வைத்துள்ளார். கஷ்டகாலங்களில் உதவியது மட்டுமல்லாமல் தன்னை தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் அறிமுகம் செய்த தனுஷின் மீது தனி மரியாதை வைத்துள்ளார் வெற்றிமாறன். இந்நிலையில் விடுதலை படத்திற்கு பிறகு தனுஷுடன் இணைந்து வெற்றிமாறன் வடசென்னை 2 படத்தை உருவாக்க இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.