எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Leo movie update: நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் லியோ குறித்த அப்டேட் கொடுத்திருக்கிறார்.
லியோமாஸ்டரை அடுத்து விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும் நடந்தது. காஷ்மீரில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இதையடுத்து மார்ச் 23ம் தேதி படக்குழு சென்னை திரும்பியது. அவர்கள் ஊர் திரும்பும் முன்பு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் அதனால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அறிவிப்பு வெளியிட்டார்கள்.
லோகேஷ்லியோ படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிப்பதில் குறியாக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார் லோகேஷ். முன்னதாக வெளியான லியோ ப்ரொமோவில் Bloody Sweet என்பார் விஜய். அது என்ன Bloody Sweet என்று லோகேஷ் கனகராஜிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, விக்ரம் படத்தில் ஆரம்பிக்கலாங்களா என்று வருவது போன்று தான் இந்த Bloody Sweet. படத்தில் பார்த்து ரசிக்கவும் என்றார்.
மாஸ்லியோ எத்தகைய படம் என்பது குறித்தும் தெரிவித்துள்ளார் லோகேஷ். அவர் கூறியதாவது, லியோ ஒரு பக்கா மாஸ் ஆக்ஷன் படம். இன்னும் 60 நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. அத்துடன் படப்பிடிப்பு முடிந்துவிடும். திட்டமிட்டபடி அக்டோபர் 19ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வோம் என்றார்.
மகிழ்ச்சிபக்கா மாஸ் ஆக்ஷன் படம் என்று லோகேஷ் கனகராஜ் கூறியதை கேட்டு விஜய் ரசிகர்களால் சந்தோஷப்படாமல் இருக்க முடியவில்லை. இருக்கு, சிறப்பான தரமான சம்பவம் இருக்கு. தளபதியன்ஸ் திருவிழாவை கொண்டாட தயாராகுங்கள் என சமூக வலைதளங்களில் சந்தோஷமாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். சூப்பர் அப்டேட் கொடுத்த லோகேஷுக்கு நன்றி என்றும் கூறியுள்ளனர்.
இன்ஸ்டாவந்துட்டார், தளபதி இன்ஸ்டாவுக்கு வந்துட்டார்லியோ அப்டேட் கிடைத்த சந்தோஷம் ஒரு பக்கம், விஜய் இன்ஸ்டாகிராமில் சேர்ந்த சந்தோஷம் மறுபக்கம் என தளபதி ரசிகர்கள் ஒரே குஷியில் இருக்கிறார்கள். ஏப்ரல் 2ம் தேதி இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார் விஜய். தன்னுடைய க்யூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்ட்டுக்கு 24 மணிநேரத்திற்குள் 4 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்திருக்கிறது.
ஃபாலோயர்ஸ்விஜய் இன்ஸ்டாகிராமுக்கு வந்ததில் இருந்து அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. விஜய்யை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 4 மில்லியனாக உள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Vijay: அன்று ரஜினிக்கு நடந்த அதே அதிசயம் இன்று விஜய்க்கு நடக்குது: தளபதினா சும்மாவா!
சாதனைவிஜய் இன்ஸ்டாகிராமுக்கு வந்த 24 மணிநேரத்திற்குள் அவருக்கு 4 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்திருக்கிறார்கள். அதிக ஃபாலோயர்கள் வைத்திருக்கும் தென்னிந்திய நடிகர் என்கிற புது சாதனையை விஜய் படைப்பார் என்பதில் சந்தேகமே இல்லை என்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.