தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் படமாக ‘லியோ’ உருவாகி வருகிறது. இந்தப்படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் சோஷியல் மீடியாவை தெறிக்கவிட்டு வருகிறது. அத்துடன் இந்தப்படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்து வருகிறது. இந்நிலையில் ‘லியோ’ படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் அப்டேட் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
விஜய் நடிப்பில் கடைசியாக ‘வாரிசு’ படம் வெளியானது. கடந்த பொங்கலுக்கு தமிழ், தெலுங்கு மொழியில் ரிலீசான இந்தப்படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கியிருந்தார். ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்த இந்தப்படத்தில் பிரபு, சரத்குமார், ஷாம், சங்கீதா, ஜெயசுதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ‘வாரிசு’ படம் பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் சீரியல் போல் இருப்பதாக பலரும் கழுவி ஊற்றினார்கள்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக லோகேஷுடன் இணைந்துள்ளார் விஜய். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு மறுபடியும் விஜய்யை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். ‘மாஸ்டர்’ படத்தில் லோகேஷ் கனகராஜின் மேக்கிங் ஸ்டைல் மிஸ்ஸிங் என்ற விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் தற்போது ‘லியோ’ படத்தை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் இயக்கி வருவதாக பேட்டிகளில் கூறி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக காஷ்மீரில் ‘லியோ’ படப்பிடிப்பு நடந்து வந்தது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக காஷ்மீர் ஷெட்யூலை முழுவதுமாக நிறைவு செய்து சென்னை திரும்பினர் படக்குழுவினர். இன்னும் சில தினங்களில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Ajith Kumar: ‘ஏகே 62’ படம் குறித்து வெளியான அதிர்ச்சிகரமான தகவல்: வருத்தத்தில் ரசிகர்கள்.!
ஏற்கனவே ‘லியோ’ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியது. இந்நிலையில் ‘லியோ’ படத்தின் வெளிநாட்டு உரிமையும் பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், விஜய்யின் முந்தைய படமான வாரிசை ஒப்பிடும் போது, இது இரண்டு மடங்கு அதிக லாபம் எனவும் கூறப்படுகிறது.
இதனால் விஜய் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத், பிரபல இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் மற்றும் அர்ஜுன், பிரியா ஆனந்த், சாண்டி, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அத்துடன் நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘லியோ’ படத்தில் விஜய், திரிஷா கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விருது விழாவில் அவமானப்படுத்தப்பட்டாரா நெல்சன்.?: கொந்தளிக்கும் ரசிகர்கள்.!