சென்னை : நடிகை நயன்தாரா தனது மகன்களுக்கு வித்தியாசமாக பெயர் வைத்துள்ளார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஐயா திரைப்படத்தில் கொழுகொழு பெண்ணாக க்யூடாக நடித்திருந்தார் நயன்தாரா. முதல் படத்திலேயே “ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்” என பாட்டுப்பாடி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வல்லவன், சந்திரமுகி, கஜினி கள்வனின் காதலி என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி ஸ்டார் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.
நடிகை நயன்தாரா
ரஜினி, அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ்,விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார் நயன்தாரா. ராஜா ராணி, மாயா,டோரா, அறம் நானும் ரவுடிதான், மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், கடைசியாக கனெக்ட் போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தேர்வு செய்து நடித்து, லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்தார்.

ஆறு ஆண்டு காதல்
இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது, விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 6 ஆண்டுக்கும் மேலாக அனைவருக்கும் பிடித்த ஜோடியாக இருவரும் வலம் வந்து கொண்டிருந்த இந்த ஜோடி ஜூன் 9ந் தேதி அனைவரும் வியந்து பார்த்து அளவுக்கு 20க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் மந்திரம் ஓத தடபுடலாக திருமணம் நடந்து முடிந்தது.

இரட்டை குழந்தைகள்
ஜூன் மாதம் திருமணம் ஆனநிலையில் அக்டோபர் மாதம் வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராக இந்த தம்பதி மாறினர். இந்த விவகாரம் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், ஜூன் மாதத்திற்கு முன்னதாகவே ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துக் கொண்டதாக விளக்கம் அளித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

வித்தியாசமான பெயர்
நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களது இரட்டை ஆண் குழந்தைக்கு உயிர், உலகம் என பெயர் வைத்திருந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் தனது மகன்களுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என பெயர் வைத்துள்ளதாக கூறியுள்ளார். இந்த கேள்விப்பட்ட ரசிகர்கள் அட வித்தியாசமான பெயரா இருக்கே என்று கூறிவருகின்றனர்.