Nokia C12 Plus: 7,999 ரூபாயில் புதிய என்ட்ரி லெவல் போனுடன் குதித்த நோக்கியா!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
HMD Global நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் Nokia நிறுவனம் இந்தியாவில் அதன் C12 Plus என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் Unisoc Octa Core Processor, 4000mAh பேட்டரி, Android Go Edition ஆகிய முக்கிய வசதிகள் உள்ளன.

Nokia C12 விவரம்

இந்த ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் HD+ டிஸ்பிளே வசதி, 720×1520 Pixels Resolution, வாட்டர் ட்ராப் ஸ்டைல் நோட்ச், Unisoc Octa Core Processor, 1.6HZ Frequency வசதிகள் உள்ளன. இதில் 2GB RAM மற்றும் 32GB ஸ்டோரேஜ் வசதி மட்டுமல்லாமல் கேமரா அம்சங்களாக 8MP முக்கிய கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமரா வசதி உள்ளது. இதன் முன்பக்கம் செல்பி மற்றும் வீடியோ கால் வசதி உள்ளது.

பேட்டரி தேவைக்காக 4000mAh, Wi-Fi, ப்ளூடூத் 5.2, மைக்ரோ USB போர்ட், 3.5mm ஹெட் போன் ஜாக், Android 12 GO Edition போன்ற வசதிகள் இதில் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. இதனை நாம் வாங்க Nokiaவின் அதிகாரபூர்வ இணையதளம் செல்லவேண்டும்.

இதனுடன் புதிதாக Nokia Pure UI என்ற Custom OS ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய Android UI பயனர்களுக்கு தனித்துவமான முன்னேற்றமான வசதிகளை வழங்கவும் சுலபமாக பயன்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் டிசைன் எளிமையாகவும் சுலபமாகவும் இருப்பதால் நம்மால் அதனை சுலபமாக பயன்படுத்தமுடியும். இதுவரை Google நிறுவனத்தின் Stock Android மட்டுமே நோக்கியா போன்களில் இருந்துவந்தன, முதல் முறையாக Nokia நிறுவனம் அதன் தனிப்பட்ட OS ஒன்றை உருவாக்கியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.