சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து தலைவர் 170, லால் சலாம் ஆகிய படங்களிலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், 1999ம் ஆண்டு வெளியான படையப்பா படத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.
அதாவது நீலாம்பரி கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராய் மட்டும் இல்லாமல் மேலும் இரண்டு முன்னணி நடிகைகளும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டாரின் படையப்பா
90களின் இறுதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மிகப் பெரிய மாஸ் ஹிட் கொடுத்த திரைப்படம் படையப்பா. கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினியுடன் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், செளந்தர்யா, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 1999 ஏப்ரல் 10ம் தேதி வெளியான படையப்பா வெள்ளி விழா கொண்டாடியது. அதுமட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் மழை கொட்டியது.

நீலாம்பரி கேரக்டர்
இந்தப் படத்தில் ரஜினியின் படையப்பா கேரக்டரை விடவும் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி பாத்திரம் தான் மாஸ் காட்டியது. பல வருடங்களாக ஃபீல்டில் இல்லாமல் இருந்த ரம்யா கிருஷ்ணன், படையப்பா மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்தார். ஆனால், இந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது ஐஸ்வர்யா ராய் தான். இவரை நடிக்க வைக்க வேண்டும் என ரஜினி ரொம்பவே விருப்பப்பட்டுள்ளார்.

நோ சொன்ன நாயகிகள்
ஆனால், அப்போது படையப்பா படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் மறுத்துவிட்டாராம். இதனால், அடுத்து நடிகை மீனாவிடம் கேட்டுள்ளார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். ஆனால் அப்போது ரஜினியும் மீனாவும் ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக கொண்டாடப்பட்டனர். இதனால், ரஜினிக்கு வில்லியாக நடித்தால் தன்னுடைய மார்க்கெட் காலியாகிவிடும் என பயந்து மீனா மறுத்துவிட்டாராம்.

பாட்ஷா நாயகி
அதன்பிறகு நக்மாவை நீலாம்பரி பாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என படக்குழு முடிவு செய்துள்ளது. அந்நேரம் நக்மாவின் கால்ஷீட் பிஸியாக இருந்துள்ளது. அதனால் அவராலும் படையப்பாவில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன்பின்னர் தான் நீலாம்பரி கேரக்டரில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் கமிட் ஆகியுள்ளார். மீண்டும் படையப்பாவில் இருந்து தனது ஆட்டத்தை தொடங்கிய ரம்யா கிருஷ்ணன், பாகுபலி படம் மூலம் ராஜமாதாவாக மாஸ் காட்டி வருகிறார்.