சென்னை: நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
இந்நிலையில், மலர் டீச்சர் கேரக்டர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற என்ன காரணம் என சாய் பல்லவி மனம் திறந்துள்ளார்.
மேலும், மலர் டீச்சர் கேரக்டரில் நடித்த பிறகு தான் கற்றுக் கொண்டது என்ன என்பது பற்றியும் பேசியுள்ளார்.
பிரேமம் மலர் டீச்சர்
எல்லோருக்கும் அவரவர் பள்ளிக் காலங்களில் மனதுக்கு பிடித்த ஒரு டீச்சர் இருந்திருக்கக் கூடும். அப்படி பலரது நினைவுகளில் இருந்த டீச்சர்களையே ஓரங்கட்டியவர் என்றால், அது பிரேமம் படத்தில் வரும் மலர் டீச்சராக தான் இருக்க முடியும். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் அறிமுகமானார் சாய் பல்லவி. அதுவரை விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் மட்டுமே தலை காட்டி வந்த சாய் பல்லவி, பிரேமம் படத்திற்குப் பின்னர் முன்னணி நாயகியாக வலம் வரத் தொடங்கினார்.
மலர் டீச்சர் ரகசியம்
பிரேமம் படத்தில் நிவின் பாலிக்கும் சாய் பல்லவிக்கும் இடையேயான ரொமாண்டிக் சீன்ஸ் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. முக்கியமாக பருக்கள் நிறைந்த முகம், போல்டான வாய்ஸ் டோன் என சாய் பல்லவியின் இமேஜ் பக்காவாக செட் ஆனது. இந்நிலையில், இதன் ரகசியம் குறித்து தற்போது மனம் திறந்துள்ளார் சாய் பல்லவி. மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், பிரேமம் படத்தில் மேக்கப் இல்லாமல் தான் நடித்தேன், அதனால் தான் அந்த கேரக்டர் ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆனதாக நினைக்கிறேன் என்றுள்ளார்.
சாய் பல்லவியின் முடிவு
பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கேரக்டர் வரவேற்பைப் பெற்றதால், தனது நம்பிக்கை இன்னும் அதிகரித்தது. அதனால் தொடர்ந்து மேக்கப் இல்லாமல் நடிக்கலாம் என முடிவெடுத்தேன். எனக்கு கிடைத்த இயக்குநர்களும் தன்னை மேக்கப் போட வேண்டும் என வற்புறுத்தவில்லை எனக் கூறியுள்ளார். நடிகைகள் என்றாலே மேக்கப் தான் அவர்களது அழகின் ரகசியம் என சொல்லப்படும் நிலையில், சாய் பல்லவி ரொம்பவே துணிச்சலாக இந்த முடிவு எடுத்துள்ளார் என ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் பெருமிதம்
இதனிடையே கடந்த வாரம் சென்னையில் நடந்த விருது விழாவில் சாய் பல்லவியும் சிவகார்த்திகேயனும் பங்கேற்றனர். சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 படத்தில் சாய் பல்லவி தான் நாயகியாக நடிக்கிறார். அதுகுறித்து பேசிய சிவகார்த்திகேயன், சாய் பல்லவியிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம், எப்போதுமே அவங்க தான் ஸ்மார்ட் என பேசியிருந்தார். ஆனால், நடனத்தில் சாய் பல்லவியிடம் போட்டியிட முடியாது என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
மீ டூ குறித்து ஓபன் டாக்
சில தினங்களுக்கு முன்னர் Me Too குறித்து நடிகை சாய் பல்லவி ஓபனாக பேசியிருந்தார். அதாவது “உடல் ரீதியாக மட்டும் இல்லாமல் பெண்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் வார்த்தைகள், செய்கைகளையும் கடந்து செல்ல முடியாது. பெண்களை அசிங்கமாக பேசுவதும் திட்டுவதும் அவர்களுக்கு மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவதும் Me Too-வில் தான் வரும்” என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.