எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்திருக்கும் சாகுந்தலம் படம் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்திருக்கிறார்.
சாகுந்தலம் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சமந்தா. இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அப்பொழுது சமந்தா கூறியதாவது, எனக்கு மலையாள படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரே மாதிரி நடிப்பதாக தோன்றினால் உடனே மலையாள படத்தை தான் பார்ப்பேன். மலையாள படங்களில் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஃபஹத் ஃபாசிலின் நடிப்பை பார்த்து அசந்துவிட்டேன். ஒவ்வொரு மலையாள நடிகரும் சிறப்பாக நடிக்கிறார்கள்.
மலையாள படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் எனக்கு மலையாளம் தெரியாதது வருத்தமாக உள்ளது.
என் அம்மா ஒரு மலையாளியாக இருந்தும் கூட எனக்கு மலையாளம் கற்றுக் கொடுக்காமல் இருந்துவிட்டார்கள். அதை நினைத்து அவர் மீது எனக்கு தற்போதும் கூட வருத்தம் இருக்கிறது.
மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மலையாளம் கற்றுக் கொண்டு நானே பேசுவேன் என்று உறுதி அளிக்கிறேன் என்றார்.
சாகுந்தலம் படம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சாகுந்தலம் பட விளம்பரத்தை துவங்கும் முன்பு ஹைதராபாத்தில் இருக்கும் பெத்தம்மா கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். காவல் தெய்வமாக கருதப்படும் பெத்தம்மாவிடம் ஆசி வாங்கிவிட்டு விளம்பர நிகழ்ச்சியை துவங்கினார் சமந்தா.
Samantha: நடிகர் தேவ்மோகனுடன் காவல் தெய்வமான பெத்தம்மா கோவிலுக்கு சென்ற சமந்தா
அவருடன் தேவ் மோகனும் பெத்தம்மா கோவிலுக்கு சென்றார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
சமந்தா தற்போது ராஜ் மற்றும் டி.கே. இயக்கத்தில் சிடாடல் வெப்தொடரில் நடித்து வருகிறார். சாகுந்தலம் பட விளம்பரத்திற்காக பிரேக் எடுத்திருக்கிறார்.
சிடாடல் தொடரில் வருண் தவானும், சமந்தாவும் உளவாளிகளாக நடிக்கிறார்கள். அந்த வெப்தொடரில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. டூப் எல்லாம் போடக் கூடாது, நானே நடிப்பேன் என்று நடித்து வருகிறார் சமந்தா.
Samantha: சிடாடல் தொடரில் நடிக்கும் சமந்தாவுக்கு காயம்: போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி
அப்படி நடித்தபோது கையில் காயம் ஏற்பட்டதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயில் இருந்து குணமாகி வரும் நேரத்தில் இதெல்லாம் தேவையா சம்மு என ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
முன்னதாக தன் உடல்நலம் தேற விரும்பி பழனி முருகன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார் சமந்தா. அவர் 600 படிகளிலும் கற்பூரம் ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்தார். உடம்புக்கு முடியாத நேரத்தில் இப்படி எல்லாம் செய்வது ரொம்ப தப்புமா என்றார்கள் ரசிகர்கள்.
உடம்புக்கு முடியவில்லை என்பதால் வீட்டோடு முடங்கிவிட விரும்பவில்லை சமந்தா. அதனால் வழக்கம் போன்று ஒர்க்அவுட் செய்வது, ஷூட்டிங்கிற்கு செல்வது என்று தன் மனதுக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார். மனதை சந்தோஷமாக வைத்துக் கொண்டால் உடம்பும் நன்றாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.