Sony Playstation 5 மீண்டும் இந்தியாவில் வாங்கலாம்! எப்படி வாங்குவது?

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
உலகளவில் கேமிங் கருவொக்கலில் மிகவும் பிரபலமாக இருக்கும் சோனி நிறுவனத்தின் Play station 5 இந்தியாவில் தொடர்ந்து அதிகப்படியான டிமாண்ட் கொண்டிருந்தது. இதை ஆன்லைன் மூலம் வாங்குவது என்பது பெரும் போராட்டமாக இருந்தது.

இதன் காரணமாக நேரடி கடைகளில் PS5 சாதனத்தை வாடிக்கையாளர்கள் வாங்கினார்கள். ஆனால் அப்படி வாங்குவதால் வங்கி சலுகைகள் போன்றவை மிகவும் குறைவாகவே கிடைக்கும். மேலும் நேரடி கடைகளில் விற்பவர்கள் தேவையில்லாத பல PS5 கேமிங் விளையாட்டுகளை எல்லாம் அதனுடன் இணைத்து கூடுதல் விலை ஏற்றி விற்பனை செய்வார்கள்.

Amazon மூலம் வாங்குவது எப்படி?

இந்த PS5 டிஜிட்டல் எடிஷன் 39,990 ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. இதன் ஸ்டாண்டர்ட் டிஸ்க் எடிஷன் 49,990 ஆயிரம் ரூபாய் விலையில் உள்ளது.இதில் Amazon Pay ICICI Credit Card மூலமாக நாம் 5% cashback (1,999 ஆயிரம், 2,499 ஆயிரம் தள்ளுபடி) கிடைக்கும். HSBC கிரெடிட் கார்டு மூலம் 250 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.

Amazon இந்த கேமிங் கருவிக்கு 7 நாட்கள்Replacement வழங்குகிறது. இந்த கருவியுடன் நமக்கு டூயல் சென்ஸ் கண்ட்ரோலர், HDMI கேபிள், AC பவர் கோர்ட், USB A – USB C கேபிள், கன்சோல் ஸ்டேண்ட் போன்றவை கிடைக்கின்றன. இதற்கு கூடுதலாக டூயல் சென்ஸ் கண்ட்ரோலர் வேண்டும் என்றால் 5,389 ஆயிரம் ரூபாய் பணத்தில் பெறலாம்.

ShopAtSC மூலம் வாங்குவது எப்படி?

நேரடியாக சோனி நிறுவனத்திடம் இருந்து வாங்கவேண்டும் என்றால் ShopAtSC இணையதளம் செல்லவேண்டும். இதன் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லை. இங்கு நாம் வாங்குவதால் சுலபமான EMI மற்றும் ஒரே வாரத்தில் டெலிவரி பெறலாம்.

இந்த கருவிகள் Black and White கலர் ஆப்ஷனில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் டிஜிட்டல் எடிஷன் டிஸ்க் வசதியில்லாமல் வருகிறது. இதற்காக தனியாக PS Plus Subscription பெறுவதால் புதிய கேம் பலவற்றை விளையாடலாம். இதன் விலை 2,999 ஆயிரம், 4,999 ஆயிரம், 5,749 ஆயிரம் ரூபாய் விலையில் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.