Soori: சூரிக்கு என் வீட்டுல சாப்பிட்ட நன்றிக்கூட இல்ல… பிரபல நடிகர் ஆவேசம்!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
நடிகர் சூரிக்கு கொஞ்சம் கூட நன்றியே இல்லை என்றும் தன்னை போனில் கூட விசாரிக்கவில்லை என்றும் விளாசியிருக்கிறார் பிரபல நடிகர்.

சூரிதமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக தடம் பதித்துள்ளார். விடுதலை படத்தில் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சூரி என பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக அவர் எடுத்துள்ள ரிஸ்க்கை பார்த்து முன்னணி நடிகர்களே பிரமித்து போயுள்ளனர்.
​ Viduthalai Part 1: ‘விடுதலை’ வெற்றி… அள்ளி அள்ளிக் கொடுக்கும் வெற்றிமாறன்.. வேற லெவல்!​
நன்றி இல்லாதவர்இந்நிலையில் நடிகர் சூரியை திட்டி தீர்த்துள்ளார் நடிகர் போண்டா மணி. சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் போண்டா மணிக்கு மருத்துவ சிகிச்சைக்காக உதவி செய்யுமாறு சக நடிகர்கள் கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்டனர். இதையடுத்து நடிகர் போண்டாமணிக்கு சினிமா பிரபலங்கள் பலரும் உதவிக்கரம் நீட்டி வந்தனர்.
​ Kajal Aggarwal: கணவருடன் செம ரொமான்ஸ்… காஜல் அகர்வாலின் ஹாட் க்ளிக்ஸ்!​
போண்டா மணிஅவருக்கு விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. இந்நிலையில் நடிகர் போண்டா மணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் 8 மாதங்களாக வேலை இல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். ண்பர்கள் தான் செய்கிறார்கள் என்றும், அறுவை சிகிச்சைக்கு 7 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
​ Mayilsamy: மயில்சாமி கூறிய அந்த வார்த்தை… நினைத்து நினைத்து கலங்கும் போண்டாமணி!​
ரஜினிகாந்த் உதவிதயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் அறுவை சிகிச்சைக்கு உதவுவதாக கூறியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் போண்டா மணி. மேலும் நடிகர் வடிவேலு தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று வருத்தப்பட்டுள்ள போண்டா மணி, நடிகர் சூரியும் தனக்கு உதவி செய்யவில்லை என ஆதங்கப்பட்டுள்ளார்.
​ Samantha: நான் எந்த தவறும் செய்யவில்லை… 100% உண்மையாக இருந்தேன்… சமந்தா உருக்கம்!​
என் வீட்டில் சாப்பிட்டார்நடிகர் சூரி தன் வீட்டில் தங்கி சாப்பிட்டவர் என்றும் அவர் ஒரு போன் பண்ணி கூட தன்னை விசாரிக்கவில்லை வருத்தப்பட்டுள்ளார். கூட நடிக்காத விஜய்சேதுபதி சார் தனக்கு உதவி செய்யும் போது சூரிக்கு போனில் விசாரிப்பதற்கு என்ன என்றும் கேட்டுள்ளார் நடிகர் போண்டா மணி. மேலும் தாங்கள் 55 வாரம் செய்த காமெடி தொடரில் நடிக்க காதல் சுகுமார், நடிகர் சூரியை தினமும் அழைத்து வருவார் என்றும் அப்போது அவருக்கு தினமும் 200 ரூபாய் கொடுத்ததாகவும் தெரிவத்துள்ளார் போண்டா மணி.
​ அடுத்த ரவுண்டை ஆரம்பித்த த்ரிஷா!​
மறந்துவிட்டார்அப்போதெல்லாம் சூரி தன்னுடைய வீட்டில்தான் தங்கியிருப்பார் என்றும் தன்னுடைய வீட்டில்தான் சாப்பிடுவார் என்றும் கூறியுள்ள போண்டா மணி, ஜெயித்த பிறகு சூரி தன்னை கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். நடிகர் போண்டா மணி இலங்கையை பூர்விகமாக கொண்டவர். தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
​ Samantha: சினிமாவில் இருந்து ஒதுங்கும் சமந்தா… அதிர்ச்சியில் ரசிகர்கள்!​
Soori

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.