Trisha: 40 வயசுன்னு சொன்னா சத்தியமா நம்ப மாட்டாங்க… முத்தங்களை பறக்கவிடும் ரசிகர்கள்!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
நடிகை த்ரிஷா ஷேர் செய்துள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.

நடிகை த்ரிஷா1999ஆம் ஆண்டுக்கான மிஸ் சென்னை அழகி பட்டத்தை வென்ற நடிகை த்ரிஷா. விளம்பர படங்களின் மூலம் கெரியரை தொடங்கினார். அதே ஆண்டு பிரசாந்த் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார் த்ரிஷா. அதன்பிறகு 2002ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான மவுனம் பேசியதே படத்தில் லீடிங் ரோலில் நடித்த த்ரிஷாவுக்கு அதில் இருந்து ஏறு முகம் தான்.
​ Trisha: அசத்தும் அழகில் த்ரிஷா… ஜொள்ளு விட வைக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!​
பொன்னியின் செல்வன்தொடர்ந்து தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் த்ரிஷா. கமலுடன் மன்மதன் அம்பு மற்றும் தூங்காவனம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதேபோல் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்துள்ளார் த்ரிஷா. பொன்னியின் செல்வன் திரைப்படம் த்ரிஷாவின் சினிமா கெரியரில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. ​ Soori: சூரிக்கு என் வீட்டுல சாப்பிட்ட நன்றிக்கூட இல்ல… பிரபல நடிகர் ஆவேசம்!​
லியோ பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றார். அதன்பிறகு த்ரஷா தனது சம்பளத்தை உயர்த்தியதாகவும் தகவல் வெளியானது. மேலும் முன்னணி நடிகர்களின் படங்களிலும் த்ரிஷாவின் பெயர் அடிபட்டது. நடிகை த்ரிஷா தற்போது நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
​ Mayilsamy: மயில்சாமி கூறிய அந்த வார்த்தை… நினைத்து நினைத்து கலங்கும் போண்டாமணி!​
புதிய போட்டோஸ்இந்தப் படத்தின் மூலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கின்றனர். அடுத்ததாக த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றை போலவே இந்தப் படமும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது கலக்கல் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
​ Samantha: நான் எந்த தவறும் செய்யவில்லை… 100% உண்மையாக இருந்தேன்… சமந்தா உருக்கம்!​
கொல்லும் அழகுஅதில் நடிகை த்ரிஷா மெரூன் நிற கவுனில் அசத்தலாக உள்ளார். த்ரிஷாவின் இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் முத்தங்களையும் ஹார்ட்டின்களையும் பறக்கவிட்டு வருகின்றனர். மேலும் க்யூட்னஸ் ஓவர் லோடட், அழகி பேரழகி, அழகு தேவதை என தோன்றியதை எல்லாம் கூறி வர்ணித்து வருகின்றனர். மேலும் விஜய்யுடன் சேர்ந்திருக்கும் போட்டோவை ஷேர் செய்யும்படி கேட்டு வரும் ரசிகர்கள், 40 வயது என்று சொன்னால் நம்ப முடியுமா என்றும் கேட்டு வருகின்றனர்.
​ அடுத்த ரவுண்டை ஆரம்பித்த த்ரிஷா!​
விருது நிகழ்ச்சிஇதேபால் விருது விழா ஒன்றில் வெள்ளை நிற உடையில் நடிகை த்ரிஷா பங்கேற்ற போட்டோவும் இணையத்தை கலக்கி வருகிறது. சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் நீல நிற சேலையில் பங்கேற்றார் நடிகை த்ரிஷா. அந்த போட்டோக்கள் இணையத்தை திணறடித்த நிலையில் தற்போது புதிய போட்டோக்கள் மொத்த இண்டர்நெட்டையும் திக்குமுக்காடச் செய்துள்ளது.
​ Samantha: சினிமாவில் இருந்து ஒதுங்கும் சமந்தா… அதிர்ச்சியில் ரசிகர்கள்!​
Trisha

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.