சென்னை : நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் அவரது கேரக்டர் மிகவும் சிறப்பாக அமைந்தது.
குந்தவை என்ற கேரக்டரில் அவரது ஆளுமை மிகச்சிறப்பாக வெளிப்பட்டது. ஜெயம் ரவிக்கு அக்காவாக படத்தில் அவர் நடித்திருந்தார்.
இந்த கேரக்ரில் த்ரிஷாவும் தன்னுடைய சிறப்பாக வெளிப்படுத்திய நிலையில், அடுத்ததாக வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் 2 படததிலும் த்ரிஷாவின் குந்தவை கேரக்டர் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது.
நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா 10 ஆண்டுகளை கடந்து திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். லேசா லேசா என்ற படத்தில் துவங்கிய த்ரிஷாவின் பயணம் விஜய்யுடன் நடித்த கில்லி கில்லி, ஜெயம்ரவியுடன் நடித்த சம்திங் சம்திங் உள்ளிட்ட படங்களின்மூலம் சிறப்பாக வெளிப்பட்ட நிலையில் தொடர்ந்து முன்னணி நடிகையாகவே தன்னுடைய கேரியரை நிலைநிறுத்தி வருகிறார்.அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.
கைக்கொடுத்த 96 படம்
விஜய் சேதுபதிவுடன் த்ரிஷா நடித்திருந்த 96 படம், த்ரிஷாவின் கேரியரில் பெஸ்ட்டாக அமைந்தது இந்தப் படம் த்ரிஷாவை மீண்டும் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம்பெற செய்தது. தொடர்ந்து அடுத்தடுத்து ராங்கி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் த்ரிஷா. இந்தப் படங்களும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் த்ரிஷா நடித்திருந்த பொன்னியின் செல்வன் படம் அவரது மார்கெட்டை தூக்கி நிறுத்தியுள்ளது.
குந்தவையாக மிரட்டிய த்ரிஷா
கடந்த ஆண்டு செப்டம்பம் 30ம் தேதி வெளியானது பொன்னியின் செல்வன். இந்தப் படத்தில் த்ரிஷா கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், வரலாற்று படத்திற்கு அவர் எப்படி செட் ஆவார் என்றே முதலில் ரசிகர்கள் கமெண்ட் செய்தனர். ஆனால் படத்தின் போஸ்டர்கள், ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியான நிலையில், அவர்தான் அந்த கேரக்டருக்கு பொருத்தமானவர் என்ற விமர்சனங்கள் எழுந்தன.
ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா -கார்த்தி ஜோடி
தொடர்ந்து படம் ரிலீசாகி இந்த விமர்சனங்களுக்கு உயிர் கொடுத்தது. குந்தவை கேரக்டரில் அழுத்தமான நடிப்பை கொடுத்திருந்தார் த்ரிஷா. ஜெயம் ரவிக்கு அக்காவாக அவர் நடித்தது அவரது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்த நிலையில், அந்த கேரக்டரில் சாத்தியமான விஷயத்தைதான் அவர் செய்துள்ளார் என்ற கமெண்ட்டும் வந்தது. படத்தில் கார்த்தி -த்ரிஷா காம்பினேஷன் காட்சிகளும் சிறப்பாக அமைந்தது
அடுத்தடுத்த விருதுகள்
இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் இந்தமாதம் 28ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இந்த இரண்டாவது பாகத்தை ரசிகர்கள் சிறப்பாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் படம் த்ரிஷாவிற்கு தற்போது வரை அடுத்தடுத்த விருதுகளை பெற்றுத் தந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான ஜேஎஃப்டபள்யூ சினிமா விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை த்ரிஷா தட்டி சென்றுள்ளார்.
ட்விட்டர் ட்ரெண்டிங்கில் த்ரிஷா
இதேபோல, பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் ஐகான் 2023ன் சிறந்த நடிகைக்கான விருதையும் த்ரிஷா தட்டிச் சென்றுள்ளார். இந்த விருதை இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் இருந்து அவர் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக நடிகை த்ரிஷா தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளார். #Trisha மற்றும் #SouthQueen ஹேஷ்டேக்குகள் தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளன.