Vignesh Shivan: எப்படி இருந்த விக்னேஷ் சிவன் இப்படி ஆகிட்டாரே: ரசிகர்கள் கவலை

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
பிரபஞ்சத்தின் மீது அசைக்க முடியா நம்பிக்கை கொண்டவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். அஜித் குமாரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதை பிரபஞ்சத்திடம் சொல்லி வைத்தார். அவரின் ஆசையும் நிறைவேறியது. அந்த சந்தோஷத்தில் இருந்தபோது தான் ஏ.கே. 62 பட வாய்ப்பு கை நழுவிப் போனது.

Vignesh Shivan: இந்த சோகத்திலும் அஜித் சொன்னதை மட்டும் மறக்காத விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டு மகிழ்திருமேனியை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். தான் பெரிதும் எதிர்பார்த்த பட வாய்ப்பு கடைசி நேரத்தில் கைநழுவிப் போனதில் விக்னேஷ் சிவன் செம அப்செட்டாகி விட்டார். அவருக்கு நயன்தாரா தான் ஆறுதல் கூறி வருகிறார்.

யார் என்ன ஆறுதல் கூறினாலும் ஏ.கே. 62 பட சோகத்தில் இருந்து விக்னேஷ் சிவன் இன்னும் மீண்டு வரவில்லை என்பது அவரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகள், இன்ஸ்டா ஸ்டோரீஸ் மூலம் தெரிகிறது.

அவர் ஏதாவது போஸ்ட் போட்டால், ஏ.கே. 62 படத்தை நினைத்து தான் கவலையில் இப்படி சொல்கிறார் போன்று என்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் தான் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டார். Black Charm எனும் எண்ணெய்யை விளம்பரம் செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன். அந்த எண்ணெய் பாட்டிலுடன் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

விக்னேஷ் சிவனின் அந்த போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

எப்படி இருந்த மனுஷன் இப்படியாகிட்டார். என்ன அன்பான இயக்குநரே எண்ணெய் விற்கும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டீர்கள். இந்த மனுஷனை போய் லேகியம், எண்ணெய் விற்க வைத்துவிட்டார்களே. உங்களின் தரத்தை குறைத்துக்கொள்ள வேண்டாம் அன்பான இயக்குநரே.

சார், நீங்க ஒரு இயக்குநர் என்பதை மறந்துவிட வேண்டாம். அஜித் படம் எடுப்பீர்கள் என்று பார்த்தால் எண்ணெய் விற்றுக் கொண்டிருக்கிறீர்களே.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சோப்பு, எண்ணெய், லேகியம் விற்பதை விட்டுவிட்டு மாஸா ஒரு ஸ்க்ரிப்ட் தயார் செய்து படம் எடுங்க விக்னேஷ் சிவன். இது உங்க வேலை இல்லை என தெரிவித்துள்ளனர்.

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சேர்ந்து தங்களின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார்கள். இந்நிலையில் ஷுப் யாத்ரா எனும் குஜராத்தி மொழி படத்தை தயாரித்திருக்கிறார்கள். அந்த படம் வரும் 28ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் குஜராத்தி மொழி படத்தை தயாரித்திருப்பது இதுவே முதல் முறையாகும். அந்த படத்தை தமிழிலும் ரிலீஸ் செய்யுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித் பட வாய்ப்பு போனதை அடுத்து இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து படம் எடுக்க முடிவு செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன். அந்த படத்தில் தன் காதல் மனைவியான நயன்தாராவை நடிக்க வைக்கிறார்.

Vignesh Shivan:தல மீது விக்னேஷ் சிவனுக்கு தான் எம்புட்டு பாசம்: போட்டோ பார்த்தீங்களா?

நானும் ரௌடி தான், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை அடுத்து மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் நயன்தாரா.

நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஜவான் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.