எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Vijay sets record in Instagram:விஜய் இன்ஸ்டாகிராமுக்கு வந்த வேகத்தில் அசால்டாக லட்சக் கணக்கில் ஃபாலோயர்களை பெற்றுவிட்டார்.
இன்ஸ்டாகிராம்தளபதி விஜய் விரைவில் இன்ஸ்டாகிராமுக்கு வருகிறாராம் என தகவல் வெளியானது. இந்நிலையில் தான் ஏப்ரல் 2ம் தேதி மாலை இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார் விஜய். தன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நண்பா, நண்பீஸிடம் தன் வரவை அறிவித்தார். மேலும் இன்ஸ்டா ஸ்டோரீஸில் தன்னுடைய செம க்யூட் புகைப்படத்தையும் வெளியிட்டார்.
1 மில்லியன்விஜய் இன்ஸ்டாகிராமுக்கு வந்துட்டாரா என திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அங்கு வந்து கொண்டே இருக்கிறார்கள். இதனால் இன்ஸ்டாகிராமில் விஜய்யை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்ஸ்டாவுக்கு வந்த 99 நிமிடங்களில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களை பெற்றார் விஜய்.
Trisha: த்ரிஷாட்ட அதை மட்டும் கேட்காதீங்க, சொல்ல மாட்டாங்க: லோகேஷ் கனகராஜ்
மூன்றாவது பிரபலம்இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கிய வேகத்தில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற மூன்றாவது பிரபலமாக இருக்கிறார் விஜய். அந்த சாதனையை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஹலோ நண்பாஸ், நண்பீஸ் என விஜய் போட்ட முதல் போஸ்ட்டுக்கே இதுவரை 4.8 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ் வந்து குவிந்துவிட்டது. இந்த அதிசயங்களை பார்க்க விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே இருந்து வருகிறார்கள் ரசிகர்கள்.
பெருமை
24 மணிநேரம்விஜய் இன்ஸ்டாகிராமுக்கு வந்து 24 மணிநேரம் ஆகிவிட்டது. ஒரே நாளில் விஜய்க்கு 4.6 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை இத்துடன் நின்றுவிடாது. இதற்கிடையே மேலும் சில புகைப்படங்களை வெளியிடுமாறு தளபதி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிசயம்முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் கணக்கு துவங்கியபோது அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதே போன்று விஜய்க்கு இன்ஸ்டாகிராமில் நடந்து கொண்டிருக்கிறது. விஜய்யின் புகைப்படத்தை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் க்யூட்டி, தளபதி வாங்க, இந்த ஆப் அந்த ஆப்னு இல்ல எல்லா ஆப்லயும் தளபதி கில்லிடா என ரசிகர்கள் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
Vijay: அன்று ரஜினிக்கு நடந்த அதே அதிசயம் இன்று விஜய்க்கு நடக்குது: தளபதினா சும்மாவா!
லியோகெரியரை பொறுத்தவரை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இது ஒரு பக்கா மாஸ் ஆக்ஷன் படம் என நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். லியோ படத்தின் கதை எல்.சி.யூ. வா என்று கேட்டதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார். ஆனால் இது எல்.சி.யூ. கதை தான் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.
Leo: லியோ பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த லோகேஷ்: விஜய் ரசிகர்கள் செம ஹேப்பி