தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் ரசிகர்கள் அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் மோதிக்கொள்வது இந்திய அளவில் பேசப்படும். ஒரு நடிகரின் ரசிகர்கள் இன்னொரு நடிகர் குறித்து நெகட்டிவ் டேக் ஓட்டுவது, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மற்றொரு தரப்பு அதைவிட கேவலாக நெகட்டிவ் டேக் ஓட்டுவது என்பது வழக்கம்.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
என்னதான் அஜித் ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் படு ஆக்டிவாக செயல்பட்டாலும், எந்த வித சோஷியல் மீடியாவிலும் சிக்காமல் இருப்பதை தனது பாலிசியாகவே கொண்டுள்ளார் அஜித். அவருக்கு நேர் எதிராக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜய் தற்போது இன்ஸ்டாகிராமிலும் இணைந்துள்ளார். உலகளவில் பேமஸான இந்த செயலியல் இணைந்த சில மணி நேரங்களில் விஜய் செய்துள்ள சாதனையை கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் விஜய்யின் நடிப்பில் கடைசியாக ‘வாரிசு’ படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழியில் வெளியான இந்தப்படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கினார். இந்தப்படத்தை தொடர்ந்து தான் தற்போது ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப்படத்திற்கு கோலிவுட் சினிமாவே ஆர்வமுடன் காத்து வருகிறது.
‘மாஸ்டர்’ படத்திற்கு பின் இரண்டாவது முறையாக விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளது. கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. அண்மையில் அங்கு படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு இந்தியா திரும்பினார் படக்குழுவினர். இன்னும் சில தினங்களில் ‘லியோ’ படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Viduthalai: வெற்றிமாறன் மீது கோபப்பட்ட பாரதிராஜா: எல்லாத்துக்கும் காரணம் விஜய் சேதுபதி.!
இந்நிலையில் நடிகர் விஜய் நேற்றைய தினம் இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கியுள்ளார். மேலும் துவங்கிய சில மணி நேரங்களில் 2 மில்லியன் பாலோயர்கள் அவரை பின்தொடர்ந்துள்ளனர். விஜய் இன்ஸ்டாகிராம் பக்கம் துவங்கிய உடனே 99 நிமிடங்களில் 1 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார்.
ஏற்கனவே பிடிஎஸ் என்ற இசை கலைஞர் 43 நிமிடத்தில் 1 மில்லியன் பாலோயர்களையும், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 59 நிமிடங்களில் 1 மில்லியன் பாலோயர்களையும் பெற்று சாதனை படைத்த நிலையில் அவர்களுக்கு அடுத்த இடத்தில் நடிகர் விஜய் 99 நிமிடங்களில் 1 மில்லியன் பாலோயர்களை பெற்று சாதனை படைத்துள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
சூர்யா விலகிய ‘வணங்கான்’ படத்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா.?: லேட்டஸ்ட் அப்டேட்.!