Vijay: ப்பா.. என்னா ஸ்பீடு.. உலகளவில் சாதனை செய்த விஜய்.. வேற லெவல் போங்க.. கொண்டாடித் தீர்க்கும் ரசிகாஸ்!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் மிக குறுகிய காலத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்று உலக அளவில் சாதனை படைத்துள்ளார்.

விஜய்தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். கோடிக் கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் விஜய் ஒரு படத்திற்கு 120 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் பெற்று வருகிறார். கடைசியாக விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது வாரிசு திரைப்படம்.​ நயன்தாராவின் உயிரும் உலகமும்!​
லியோஇந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் செம்ம ஹிட்டானது. இதனை தொடர்ந்து தற்போது விஜய்யும் லோகேஷ் கனகராஜும் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார்.
​ Nayanthara: குழந்தைகளின் பெயரில் உள்ள N-க்கு அர்த்தம் இதுதான்… விக்னேஷ் சிவன் விளக்கம்!​
இன்ஸ்டாகிராமில் விஜய் மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், ஃபகத் ஃபாஸில், பிரியா ஆனந்த் என பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். ஏற்கனவே டிவிட்டரில் அதிகாராப்பூர்வ கணக்கு வைத்துள்ள நடிகர் விஜய், நேற்று இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
​ Trisha: 40 வயசுன்னு சொன்னா சத்தியமா நம்ப மாட்டாங்க… முத்தங்களை பறக்கவிடும் ரசிகர்கள்!​
மூன்றாவது இடம்இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக 1 மில்லியன் ஃபாலோவர்களை ஈர்த்த பிரபலங்களில் விஜய் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதலிடத்தில் பிடிஎஸ் இசைக்குழுவை சேர்ந்த வி 53 நிமிடத்திலும், இரண்டாவது இடத்தில் நடிகை ஏஞ்சலினா ஜோலி 59 நிமிடங்களிலும், மூன்றாவது இடத்தில் நடிகர் விஜய் 99 நிமிடங்களிலும் ஃபாலோயர்களை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
​ Soori: சூரிக்கு என் வீட்டுல சாப்பிட்ட நன்றிக்கூட இல்ல… பிரபல நடிகர் ஆவேசம்!​
உலக அளவில் சாதனைஅதிக ஃபாலோயர்களை பெற்று உலக அளவில் நடிகர் விஜய் செய்துள்ள சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது வரை நடிகர் விஜய் 4.6 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலை தளங்களில் Thalapathy என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்து ரசிகர்கள் மகிழ்ந்து வருகின்றனர். நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் தனது முதல் பதிவாக, லியோ படத்தின் ஸ்டில்லை ஷேர் செய்து Hello Nanbas and Nanbis என குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
​ Mayilsamy: மயில்சாமி கூறிய அந்த வார்த்தை… நினைத்து நினைத்து கலங்கும் போண்டாமணி!​
Vijay

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.