சென்னை : விஜய் டிவி புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளார்.
விஜய் டிவி நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு, அதிலும் குறிப்பாக கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர்.
தொலைக்காட்சிகளில் சீரியல்களை பார்த்து பார்த்து நொந்து போன இல்லத்தரசிகளுக்கும் இந்த காமெடி நிகழ்ச்சியின் மீது தனி ஈடுபாடு உண்டு.
விஜய் டிவி புகழ்
விஜய் தொலைக்காட்சியில் பல காமெடி நிகழ்ச்சியில் மக்களை சிரிக்க வைத்த புகழை, புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் புகழ் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இருக்காது. மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு பலவிதமான கெட்டப்புகளை போட்டு வயிறு வலிக்க சிரிக்க வைப்பது புகழின் தனி ஸ்டைல் ஆகும்.

உருக்கமான பதிவு
நாய் சேகர் கெட்டப்போட்ட புகழ், அந்த புகைப்படத்துடன் மறைந்த வடிவேலு பாலாஜியின் புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னுள் என்றும் இருக்கும் உன்னை போல் நான் மாறிய தருணம்… உனக்காக நான் செய்யும் சின்ன அர்ப்பணிப்பு என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது மாமா எப்போதுமே எனக்குள் நீ இருப்பாய் மாமா… மிஸ் யூ மாமா என பதிவிட்டுள்ளார். இந்த பதிவினைப் பார்த்த ரசிகர்கள் புகழுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

மறக்காத புகழ்
நடிகர் புகழுக்கு திருமணம் நடந்த போதும், தனது மனைவியுடன் தனது வீட்டில் வைத்து இருக்கும் வடிவேல் பாலாஜியின் புகைப்படத்தின் முன் நின்று மலர்களை தூசி ஆசீர்வாதம் வாங்கினார். இப்படி பல சந்தர்ப்பங்களில் தனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த வாழ்க்கையில் ஊக்கம் அளித்த வடிவேலு பாலாஜியை புகழ் மறக்காமல் நினைவு கூர்ந்து வருகிறார்.

வடிவேலு பாலாஜி
2020ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்த வடிவேலு பாலாஜி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் காமெடியனாக வந்து மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகர் வடிவேலுவைப் போலவே அவரது பாடி லாங்குவேஜ், வடிவேலு படத்தில் பேசிய வசனங்களான வேணா அழுதுருவேன்… எதையும் பிளான் பண்ணி பண்ணணும் போன்றவற்றை மிமிக்ரி செய்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.