நோ பால் போட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு புதிய சிக்கல் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியின் முடிவில் 20 ஓவர்களில், சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்களை குவித்தது. இதனையடுத்து, 218 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இப்போட்டியின் முடிவில் லக்னோ அணியை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன் முதல் வெற்றியை பதித்தது.
துஷாரை எச்சரித்த தோனி
நேற்று முன்தினம் நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே மீது கேப்டன் தோனி கோபம் அடைந்தார்.
ஆட்டத்தில் பல நோ பால் போட்டதால், கடுப்பான தோனி துஷார் தேஷ்பாண்டேவையும், அனைத்து csk பந்து வீச்சாளர்களுக்கும் கடைசி எச்சரிக்கை விடுத்தார்.
தோனிக்கு சிக்கல்
முதல் இரு ஆட்டத்திலும் வைடு, நோ-பால் மூலம் பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது கேப்டன் தோனிக்கு சிக்கலை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
தாமதமாக பந்து வீசும் நிலை நீடித்தால் கேப்டன் அபராதம் மற்றும் விளையாட தடை விதிக்கப்படும்.
அதாவது, ஒரு சீசனில் ஒரு அணி 3 முறை மெதுவாக பந்துவீசினால், கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.
இதைத் தான் தோனி சொல்லி பந்து வீச்சாளர்களை கண்டித்திருக்கிறார்.
போதிய அனுபவம் இல்லாத வேகப்பந்து வீச்சாளர்கள் துஷர் தேஷ்பாண்டே 5 வைடு, 4 நோ-பாலும், ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர் 6 வைடு, ஒரு நோ-பாலும் வீசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 3-வது லீக்கில் வரும் 8ம் திகதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்சை எதிர்கொள்ள இருக்கிறது.