அதிமுகவில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க கோரி விண்ணப்பங்களை அதிமுக பொதுச் செயலாளர்
விநியோகித்தார்.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கட்சியில் புதிதாக ஐம்பது லட்சம் பேரை நியமிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், காமராஜ், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கி தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தற்போது அதிமுகவில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் உள்ளனர். அதை இரண்டு கோடியாக உயர்த்துவதே எங்கள் இலக்கு. 50 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று பௌர்ணமி மற்றும் பங்குனி உத்திரம். இந்த நல்ல நாளில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி உள்ளதால் அதிமுக ஓஹோ என வளரும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக
தலைமை தங்களது கட்சியில் புதிதாக ஒரு கோடி பேரை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மாற்று கட்சிகளைச் சேர்ந்தோர், நடுநிலை வகிப்பவர்கள் ஆகியோரை தங்கள் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் ஜூன 3ஆம் தேதி கலைஞர் பிறந்தாளுக்கு முன்னதாக இந்த இணைப்பு பணிகள் நடைபெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுகவும் ஆள் சேர்ப்பு பணியில் இறங்கியுள்ளது.