சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நிகழ்ச்சி மேடை சரிந்து விழுந்தபோது, உடனடியாக சுதாரித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கீழே குதித்து காயமின்றி தப்பினார்.
வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே பாமக சார்பில் பொதுக்கூட்டமும், கொடியேற்ற விழாவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட மேடையில் ஏறிய அன்புமணிக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது, யாரும் எதிர்பாராவிதமாக திடீரென மேடை சரிந்து விழுந்த நிலையில், உடனடியாக துள்ளி குதித்து கீழே இறங்கி அன்புமணி காயமின்றி தப்பினார்.