ஆபத்தான நிலையில் நாடு உள்ளது – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை


எதிர்காலத்தில் மிகவும் கடினமான பயணம் உள்ளது. எனவே அடுத்த நான்கு வருடங்களில் நிலையான முன்னேற்றப் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தின் முன்னேற்றம் குறித்து ஊடகங்களுக்கு நேற்று ஊடகங்கள் முன்னிலையில் மத்திய வங்கியின் ஆளுநர் கருத்து வெளியிட்டார்.

எங்களிடம் கடன் மறுசீரமைப்பு சவால் உள்ளது. அடுத்து, சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தில் பல முக்கிய சீர்திருத்தங்கள் உள்ளன.

ஆபத்தான நிலையில் நாடு உள்ளது - மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை | Country In Danger Cbs Governor Warned

இதுபோன்ற பல விடயங்களை இப்போது நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. அடுத்த நான்கு வருடங்களில் அந்தப் பயணம் தொடரவில்லை என்றால், இரண்டடி எடுத்துவிட்டு ஒரு அடி பின்னோக்கிச் சென்றால், மலை ஏறி நிலையான இடத்தைப் பெறவே முடியாது.

எனவே, அடுத்த நான்கு ஆண்டுகளில், நாம் நிலையான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.