நியூயார்க்:
ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் சிறையில் அடைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
அவ்வாறு நேரிட்டால அவருக்கு எத்தனை ஆண்டுகாலம் சிறைத் தண்டனை கிடைக்கும்.. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் அவர் போட்டியிட முடியுமா என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
ஆபாச திரைப்பட நடிகை
ஆபாச திரைப்பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்த வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுடன், கடந்த 2006-ம் ஆண்டு காலக்கட்டத்தில் டிரம்ப் திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்திருக்கிறார். பின்னர் அவருடனான உறவை முறித்துக்கொண்ட டிரம்ப், கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்த சமயத்தில், தன்னுடன் கள்ள உறவில் இருந்தது குறித்து வெளியிடப்போவதாக ஸ்டோர்மி டேனியல்ஸ் மிரட்டவே, அவருக்கு 1.30 லட்சம் டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.1 கோடி) கொடுத்து டிரம்ப் சரிகட்டினார்.
வசமாக சிக்கிய டிரம்ப்
இந்த சூழலில், அண்மையில் நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் எழுதிய புத்தகம்தான் டிரம்புக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திவிட்டது. அதில், தன்னுடன் டிரம்ப் உறவில் இருந்ததையும், பணம் கொடுத்து சரிகட்டியதையும் விலாவரியாக அவர் எழுதினார். இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க உளவுத்துறை மேற்கொண்ட ரகசிய புலனாய்வில், நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை, தனது பிரச்சாரப் பணத்தில் இருந்து கொடுத்தாக ட்ரம்ப் கணக்கு காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க சட்டப்படி, இவ்வாறு பிரச்சாரப் பணத்தை ஒருவருக்கு கொடுப்பது ‘பெலனி’ குற்றமாக கருதப்படுகிறது. இதில் டிரம்ப்பின் வழக்கறிஞர் ஒருவரே சாட்சியாகிவிட்டதால் கையும் களவுமாக மாட்டியுள்ளார் டிரம்ப். எவ்வளவு முயன்று பாரத்தும் இந்த வழக்கில் இருந்து ட்ரம்ப்பால் தப்ப முடியவில்லை.
முரண்டுபிடித்த டிரம்ப்.. கூலாக சொன்ன நீதிபதி
இந்நிலையில், இந்த வழக்கில் சரணடைவதற்காக நியூயார்க் நீதிமன்றத்தில் டிரம்ப் நேற்று ஆஜராகிய நிலையில், அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த 34 குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்துக் காட்டினார். அப்போது, தான் எந்த குற்றமும் செய்யவில்லை.. நான் அதிபர் தேர்தலில் நிற்கவுள்ளதால் எனக்கு எதிராக சதி நடக்கிறது.. என என்னென்னவோ சொல்லிப் பார்த்தார் டொனால்டு டிரம்ப். இதை கேட்ட நீதிபதி, “உங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் வெறும் வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது அல்ல.. அனைத்துக்கும் ஆதாரம் இருக்கிறது” என்றார். இதன் தொடர்ச்சியாக டிரம்ப் கைது செய்யப்பட்டார். பொதுவாக, பெலனி குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கைவிலங்கிடப்படுவது வழக்கம். ஆனால், டிரம்ப் முன்னாள் அதிபர் என்ற மரியாதைக்காக அவருக்கு கைவிலங்கு மாட்டப்படவில்லை.
5 ஆண்டுகள் வரை..
இந்த சூழலில், டிரம்பை சிறையில் அடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக எஃப்பிஐ (FBI) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு அவர் மீதான குற்றங்கள் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டும். அப்படி செய்யப்பட்டால் IRC §7201 சட்டப்படி அவருக்கு தண்டனை வதிக்கப்படும். இது வரி ஏய்ப்பு மோசடியின் கீழ் வருவதால் 1 லட்சம் டாலர் அபராதமும் (இந்திய மதிப்பில் ரூ.82 லட்சம்), 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் கிடைக்கும்.
அதிபர் கனவு
ஒருவேளை, டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும் அவரால் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதுதான் அவருக்கு தற்போது இருக்கும் ஒரே ‘குட் நியூஸ்’. அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒருவர் குற்றவாளியாக இருந்தாலும் அவர் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய முடியாது. குற்றமற்றவர்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதிகள் அமெரிக்காவில் கிடையாது. அதேபோல, ஒருவர் சிறையில் இருந்தாலும் அவர் பிரச்சாரம் செய்யவும், அதிபராக செயல்பட கூட முடியும் என்பது குறிப்பிடத்கக்தது.