திருவண்ணாமலையில் அருணாசலேசுவரரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிப்பது எப்படிச் சிறப்பானதோ, அதே அளவு சிறப்பானது திருவண்ணாமலை கிரிவலம் வந்து வணங்குவது மிகவும் சிறப்பு. அருணாசலேசுவரரை மனதில் நினைத்து, கிரிவலம் வருவதன் மூலம் உடலும் உள்ளமும் நலம் பெறும்.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.இந்த நிலையில், பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் இன்று (புதன்கிழமை) காலை 10.16 மணிக்கு தொடங்கி நாளை 6-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.56 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.