உக்ரைனுக்கு புதிதாக 2.6 பில்லியன் டாலர் அளவிற்கு ராணுவ உதவியை வழங்க அமெரிக்கா திட்டம்!

உக்ரைனுக்கு புதிதாதக 2.6 பில்லியன் டாலர் அளவிற்கு ராணுவ உதவியை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

ராக்கெட் அமைப்புகளுக்கான வெடிமருந்து, பீரங்கி குண்டுகள், சிறிய ஆயுதங்கள் வாங்குவதற்காக இந்த உதவி வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனின் உடனடி போர்த் தேவைகள் மற்றும் நீண்ட கால பாதுகாப்பு உதவித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அமெரிக்காவின் உதவி தொடரும் என பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உதவியின் பெரும்பகுதி உபகரணங்கள் வாங்குவதற்கும், மீதமுள்ள பணம் தற்போதுள்ள அமெரிக்க பங்குகளில் இருந்து விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்து. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.