ஒரு பக்கம் பஞ்சம், இன்னொரு பக்கம் கடுமையான வெள்ளப்பெருக்கு: சிக்கலில் சோமாலியா மக்கள்


 சோமாலியா நாட்டில் ஏற்பட்ட கடுமையான மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோமாலியாவில் இயற்கை சீற்றம்

கடந்த சில வருடங்களாக ஆப்பிரிக்க நாடுகளில் பெரிய அளவு இயற்கை சீற்றங்கள் நடை பெற்று வருகின்றன. ஏற்கனவே கடுமையான பஞ்சத்தால் அந்நாட்டு மக்கள் துயரப்பட்டு வருகிறார்கள்.

ஒரு பக்கம் பஞ்சம், இன்னொரு பக்கம் கடுமையான வெள்ளப்பெருக்கு: சிக்கலில் சோமாலியா மக்கள் | Flood In Somalia Killed 21 Peoples African Country@cfp

இந்த நிலையில் தொடர்ந்து புயல் , வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. சோமாலியா நாட்டில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது.

ஒரு பக்கம் பஞ்சம், இன்னொரு பக்கம் கடுமையான வெள்ளப்பெருக்கு: சிக்கலில் சோமாலியா மக்கள் | Flood In Somalia Killed 21 Peoples African Country@Somali Red Crescent

இதனால் இங்குள்ள ஷபெல்லே மற்றும் ஜூபா நதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

21 பேர் உயிரிழப்பு

இந்த வெள்ளப்பெருக்கால் ஜீபா மற்றும் ஷபெல்லே போன்ற நதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள பல வீடுகள், பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.

இதனால் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது பகுதிகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஒரு பக்கம் பஞ்சம், இன்னொரு பக்கம் கடுமையான வெள்ளப்பெருக்கு: சிக்கலில் சோமாலியா மக்கள் | Flood In Somalia Killed 21 Peoples African Country@enca

இருப்பினும் இந்த சம்பவத்தில் இதுவரை 21 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட சோமாலியாவுக்கு இந்த கனமழையானது ஓரளவு விடிவு காலம் பிறக்கும் என சந்தோசப்பட்டு கொண்டிருந்த மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தற்சமயம் அது ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து சோமாலியா நாட்டு மக்கள் மீள இன்னும் சில நாட்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.