கியூபெக் மாகாணத்தில் அறுவை சிகிச்சையின் போது 84 வயது நபர் மரணமடைந்த விவகாரத்தில் முன்னாள் மருத்துவர் ஒருவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
மருத்துவர் கைது
Isabelle Desormeau என்ற அந்த மருத்துவர் மார்ச் 30 அன்று கைது செய்யப்பட்டு நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் ஏப்ரல் 21 அன்று அவரது விசாரணைக்கு ஆஜராவதாக உறுதியளித்துள்ளார்.
கடந்த 2019ல் இசபெல்லே டெசோர்மேவ் தொடர்புடைய நபருக்கு அறுவை சிகிச்சை முன்னெடுத்துள்ளார்.
ஆனால் ஆவணங்களில், அவர் பல ஆண்டுகளாக முறையான பயிற்சி எடுத்துக்கொள்ளவில்லை என்றே தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் 52 வயதான டெசோர்மேவ் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. கியூபெக் நீதிமன்ற தரவுகளின் அடிப்படையில், 2019 அக்டோபர் 31ம் திகதி அந்த 84 வயது நபர் வயிற்றுவலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
Credit: Ivanoh Demers
இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி அறுவை சிகிச்சைக்கு முன்னர் மருத்துவமனையின் நிபந்தனைக்கும் அவர் உட்பட்டுள்ளார்.
ஆனால், அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் நிலை மோசமடைந்துள்ளது.
உயிர் காக்கும் சிகிச்சைகள்
இதனையடுத்து நோயாளியை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளதாகவும், உயிர் காக்கும் சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் உறவினர்களிடம் அந்த மருத்துவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் 20 நிமிடங்களுக்கு பின்னர் அந்த நோயாளி மரணமடைந்துள்ளார். செவிலியர்கள் இருவர் உதவ முன்வந்தும், அவர்களை உதாசீனம் செய்துள்ளார் டெசோர்மேவ்.
நோயாளி மரணமடைந்த அதே நாளில் மருத்துவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 2019 டிசம்பர் 18ம் திகதி டெசோர்மேவ் தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்துள்ளார்.