கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டது தவறு என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
பேச்சிப்பாறை சமத்துவபுரத்தில் அமைந்துள்ள 98 வீடுகளுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டத்தை கையிலெடுக்க யாருக்கும் உரிமையில்லை என்றார்.
குமரி மாவட்டத்தில் சிலர் சட்டத்தை கையிலெடுக்க முயற்சி செய்து வருவதாகவும் அரசு சட்டபடி என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதை பாரபட்சமின்றி எடுக்கும் என்றும் கூறினார்.