சீனாவில் தன்னை விட்டுப் பிரிந்த முன்னாள் காதலியை திரும்பி வருமாறு கெஞ்சி, இளைஞர் ஒருவர் மழையை பொருட்படுத்தாமல் 21 மணி நேரம் முழங்காலில் நின்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னால் காதலிக்கு வேண்டுகோள்
பொதுவாக காதல் முறிவு என்பது ஒரு தீவிரமான மன அழுத்தத்தை இரண்டு தரப்பினருக்கும் தர கூட ஒன்றே, நமக்கு பிடித்த நபரை விட்டு பிரிவதும், நமக்கு பிடித்த நபர் நம்மை விட்டு பிரிவதும் தாங்க முடியாத வலியை நிச்சயம் ஏற்படுத்தும்.
அப்படி அந்த வலியை தாங்க முடியாத சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய முன்னாள் காதலியை திரும்பி வருமாறும், தன்னை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறும் கெஞ்சி, காதலியின் அலுவலகத்திற்கு வெளியே கொட்டும் மழையில் 21 மணி நேரம் முழங்கால் மண்டியிட்டு நின்றுள்ளார்.
@Baidu
வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இளைஞர் மார்ச் 28ம் திகதி அன்று Dazhou-ல் உள்ள கட்டிடம் ஒன்றின் நுழைவு வாயிலில், மதியம் 1 மணி முதல் மறுநாள் காலை 10 மணி முழங்காலில் மண்டியிட்டு நின்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
வெளியே வராத முன்னாள் காதலி
கொட்டும் மழையிலும், குளிரிலும் கையில் பூக்களுடன் முழங்காலில் மண்டியிட்டு அந்த இளைஞர் நீண்ட நேரமாக நின்றும் முன்னாள் காதலி வெளியே வராததால் இளைஞர் சோகமடைந்தார்.
@Baidu
இருப்பினும் அந்த இளைஞர் அலுவலகத்தின் வாசலில் மண்டியிட்டபடி நின்ற நிலையில், உள்ளூர் மக்கள் அவரது முயற்சியை கைவிடுமாறு கோரிக்கை வைத்தனர்.
ஒரு கட்டத்தில் பொலிஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும், அந்த இளைஞர் மனம் தளராமல், “நான் இங்கு மண்டியிடுவது சட்டத்திற்குப் புறம்பாக உள்ளதா? சட்டத்திற்குப் புறம்பாக இல்லை என்றால், தயவுசெய்து என்னை விட்டு விடுங்கள்,” என்று பொலிஸாரிடம் கேட்டுக் கொண்டார்.
இறுதியில் அந்த நபர் மார்ச் 29 அன்று காலை 10 மணிக்கு குளிர் தாங்க முடியாமல் அங்கிருந்து வெளியேறினார்.
@Baidu