வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் செவ்வாய்கிழமை நேரிட்ட பனிச்சரிவில் சுற்றுலா பயணிகள் 7 பேர் பலியான நிலையில், மேலும் 150க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கேங்டாக்கில் இருந்து நாதுலா செல்லும் வழியில் 14வது மைல் ஜவஹர்லால் நேரு சாலையில் நேற்று மதியம் 12 மணியளவில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது.
பனிச்சரிவில் சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகளை மீட்கும் பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்தாலும்,தொ டர் மழை மற்றும் பனி காரணமாக மீட்பு பணியில் ஏற்பட்டுள்ள தொய்வு மேலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் 13வது மைல் வரை செல்ல மட்டுமே அனுமதி பெற்றிருந்த நிலையில், அதையும் தாண்டி சென்றதால், பனிச்சரிவில் சிக்கியதாக கூறப்படுகிறது.