அதிமுக தலைமை அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்களை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி வழங்கினார்.
முதல் படிவத்தை எதிர்கட்சி கொறடா எஸ்பி வேலுமணி பெற்று கொண்டார். தொடர்ந்து மூத்த நிர்வாகிகளும் உறுப்பினர் படிவங்களை பெற்றுக்கொண்டனர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திருமண உதவித் திட்டம், மடிக்கணினித் திட்டம், அம்மா இருசக்கர வாகனத் திட்டம் உட்பட அனைத்தையும் நிறுத்தி விட்டார்கள்.
இந்தியாவிலேயே சிறப்பான மருத்துவமனை வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது அதிமுக அரசு. பங்குனி உத்திரம் நாளில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி உள்ளதால் இனி அதிமுக ‘ஓஹோ’ என வளரும்” என்றார்.
செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, “இரண்டு கோடி அதிமுக உறுப்பினர்களை சேர்ப்பது தான் என் முதல் பணி” என்றார்.