டெல்டாவில் நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பு; தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி ஏல ஒப்பந்த நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

டி.ஆர்.பி ராஜா,

எம்.எல்.ஏ

இது டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை ஏலம் விடும் போக்கு என்று கருத வேண்டும். சட்டத்திற்கு புறம்பான அறிவிப்பு. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே நெற்களஞ்சியம் இருக்கும் தஞ்சையில் நிலக்கரி திட்டமா? என பெரும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். எனவே டெல்டா மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று கருதி முக்கியத்துவம் வாய்ந்த கடிதத்தை முதல்வர்

எழுதியுள்ளார். நெட் ஜீரோ திட்டத்தை நோக்கி மத்திய அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு எதிர்மாறாக நிலக்கரி எடுக்கும் திட்டத்தை அறிவித்துள்ளனர்.

காமராஜ், அதிமுக எம்.எல்.ஏ

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தவர் எடப்பாடி பழனிசாமி. இப்படிப்பட்ட சூழலில் நிலக்கரி எடுக்க டெண்டர் கோரும் நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஓராண்டிற்கு முன்பிருந்தே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் தமிழக அரசின் கவனத்திற்கு எப்படி வராமல் போனது என்ற கேள்வி எழுகிறது. மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்.எல்.ஏ

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் தமிழகத்திற்கு எதிரானது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். மாநில அரசிடம் அனுமதி கூட கேட்கவில்லை. தாயின் ஈரக்கொலையை அறுப்பதற்கு சமம் இந்த நடவடிக்கை. இந்த நடவடிக்கை 28 லட்சம் ஏக்கர் நிலத்தை பாதிக்கும் நிகழ்வு. எனவே மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

ஜி.கே.மணி, பாமக எல்.எல்.ஏ

தஞ்சை தான் தமிழகத்தின் நெற்களஞ்சியம். காவிரி பாசன பகுதியை தான் டெல்டா என்று அழைக்கிறோம். நிலக்கரி நிறுவனத்தால் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே அரசு விரைவாக செயல்பட்டு பாதிப்பு ஏற்படாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.