தஞ்சாவூர் : ‘வடசேரி பழுப்பு நிலக்கரி திட்டம்’ கடலூர் : ‘சேத்தியாத்தோப்பு கிழக்கு நிலக்கரி திட்டம்’ என்ற பெயரில் அம்பாபுரம், நத்தமேடு, கிருஷ்ணபுரம், சின்னநத்தம் உள்ளிட்ட 20 கிராமங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது.
மேலும், அரியலூர் : ‘மைக்கேல்பட்டி நிலக்கரி திட்டம்’ என்ற பெயரில் அலிசுகுடி, பருக்கல், காக்காபாளையம் ஆகிய கிராமங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தமிழக விவசாயிகளும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து உள்ளனர்.
இந்த நிலையில், புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக இன்று தமிழக சட்டப்பேரவையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட காட்சிகளை சேர்ந்தவர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
தீர்மானத்தின் மீது திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட உறுப்பினர்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.
பின்னர் தீர்மானத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், “நிலக்கரி சுரங்கம் குறித்த செய்தியை கேள்விப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசினேன். நானும் டெல்டா காரம் தான். நிச்சயமாக இந்த திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது” என்று தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் நானும் டெல்டா காரன் தான் என்று கூறியதும் திமுக, விசிக, காங்கிரஸ் உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.