பிரித்தானியாவின் மிகவும் ஆபத்தானவர்கள் 24 பேர்களின் பட்டியலை வெளியிட்டு, பொதுமக்கள் எவரும் அவர்களை அணுக வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரும் குற்றவாளிகள்
பிரித்தானியாவில் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள பெரும் குற்றவாளிகள் தொடர்பில் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது தேசிய குற்றவியல் செயலாண்மை.
Credit: National Crime Agency
கடந்த மாதம் ஸ்பெயின் நாட்டிற்கு தப்ப முயன்ற பிரித்தானியாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் 6 பேர்கள் கைதாகியிருந்தனர்.
இருப்பினும், மிகவும் ஆபத்தான 24 குற்றவாளிகள் இன்னமும் தலைமறைவாக உள்ளனர் என்றே அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இதில் சிறார் துஸ்பிரயோக குற்றவாளிகள், தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மற்றும் போதை மருந்து கடத்தல் பேர்வழிகள் என பட்டியலிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய குற்றவாளிகளின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு, பொதுமக்கள் எவரும் இவர்களை அணுக வேண்டாம் எனவும், தகவல் தெரியவந்தால் 999 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை உலகம் முழுவதும் தேடப்பட்டு வருவதாகவும், ஆனால் அவர்களை நீதிக்கு முன் நிறுத்த பொதுமக்களின் உதவி தேவை எனவும் தேசிய குற்றவியல் செயலாண்மை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய வம்சாவளி ஷஷி தர் சஹ்னன்
இவர்கள் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உள்ளூர் பொலிசாரை தொடர்புகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறித்த பட்டியலில் இந்திய வம்சாவளி ஷஷி தர் சஹ்னன் என்பவரும் இடம்பெற்றுள்ளார்.
Credit: National Crime Agency
இந்தியாவில் பிறந்த இவர் பிரித்தானியாவில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
2007 ஜூலை மாதம் இவரது கட்டுப்பாட்டில் இருந்து போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டது.
இவருடன் அசிம் நவீத் என்ற ஆசிய வம்சாவளி நபரும் தொடர்புடைய பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
வேல்ஸ் பகுதியில் போதை மருந்து தொடர்பில் தேடப்படும் குற்றவாளி இந்த அசிம் நவீத். இவரது குழு சுமார் 46 கிலோ அளவுக்கு போதை மருந்தை வேல்ஸ் பகுதிக்கு கடத்தியுள்ளது.
இவர்களிடம் மேலும் 22 குற்றவாளிகளின் புகைப்படங்கள் மற்றும் தகவலகளை அதிகாரிகள் தரப்பு வெளியிட்டுள்ளது.