மாஸ்கோ: “ரஷ்ய அதிபர் புதினும் வரும் காலங்களில் இருண்ட பாதாளத்தில் தனது நாட்களைக் கழிப்பார் என நம்புகிறேன்” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார்
ரஷ்ய போரால் பாதிப்புக்குள்ளான கிராமங்களை பார்வையிட்டு வரும் ஜெலன்ஸ்கி, யாகித்னே என்ற கிராமத்தை பார்வையிட்டார். அப்போது அவர் பேசும்போது, “இக்கிராமத்தில் ரஷ்யா படையெடுக்கும்போது இங்கிருந்த கிராம மக்கள் பள்ளிக்கூடம் ஒன்றில் அடித்தளத்தில் பதுங்கினர். 200 சதுர மீட்டர் கொண்ட அந்த இடத்தில் சுமார் 367 பேர் ஒரு மாதத்திற்கு தங்கி இருந்தனர். அதில் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் 11 பேர் உயிரிழந்தனர். அந்த இருண்ட இடத்தில் கையில் வாளியுடன் கழிப்பறைகளில் மக்கள் காத்திருந்தனர். நாம் இதனை மறக்கக் கூடாது.
ரஷ்ய அதிபர் புதினும் வரும் நாட்களை இருண்ட பாதாளத்தில் கையில் வாளியுடன் கழிப்பறையில் நாட்களைச் செலவிடுவார் என நம்புகிறேன்” என்று அவர் ஆவேசத்துடன் கூறினார்.